காருக்கு டாட்டா காட்டிவிட்டு சைக்கிளில் ரைட் செல்லும் நடிகை த்ரிஷா!
சென்னை : தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார் நடிகை த்ரிஷா.
Recommended Video
இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
கர்ஜனை, ராங்கி என கதாநாயகிக்கு முன்னுரிமை தரும் படங்களிலும் நடித்து வரும் த்ரிஷா இப்பொழுது காருக்கு டாட்டா காட்டிவிட்டு புது சைக்கிளில் வலம் வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

திருப்புமுனை
ஹீரோயினாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த த்ரிஷா முதல் முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த கொடி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கதாநாயகி மட்டுமல்லாமல் என்னால் வில்லி கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என அதில் நிரூபித்துக் காட்டி இருந்தார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம்
விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்து நடித்த 96 திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. திகட்டாத காதல் கதையில் ஜானு வாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் த்ரிஷாவுக்கு கடைசியாக பரமபத விளையாட்டு ஓடிடியில் வெளியானது ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

ஓடிடியில் வெளியாக
எங்கேயும் எப்போதும்,இவன் வேற மாதிரி,வலியவன் ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இயக்கத்தில் ராங்கி மற்றும் சுந்தர் பாபு இயக்கத்தில் கர்ஜனை ஆகிய படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்து வருகிறார். இரண்டு திரைப்படங்களும் மிக விரைவிலேயே ஓடிடியில் வெளியாக உள்ளது என கூறப்படுகிறது.

சைக்கிள் ரைட்
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வர அதில் குந்தவி என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக எப்பொழுதும் காரில் செல்லக்கூடிய வழக்கம் கொண்ட த்ரிஷா இப்பொழுது காருக்கு டாட்டா காட்டி விட்டு புது சைக்கிள் வாங்கி அதில் ரைட் வருகிறார். திடீரென சைக்கிளுக்கு மாறியதை தொடர்ந்து ஒருவேளை பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு எதிராக இப்படி செய்கிறாரா என பலரும் சந்தேகித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











