'சாமி 2' படத்தில் த்ரிஷாவும் இருப்பாராம்... எப்படின்னு தெரியுமா?
சென்னை : 'சாமி 2' படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதாக த்ரிஷா விலகியதை எடுத்து, அவர் மீது தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அவரது புகாருக்கு த்ரிஷா விளக்கம் கொடுத்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் மூன்று பாகங்களிலும் ஒவ்வொரு படத்தின் கதைக்கும் ஒரு தொடர்பு இருந்தது. அதைப்போலவே தற்போது, விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' படத்தின் கதையும் சாமி படத்தின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது.

அதனால் தான் சாமி படத்தில் நடித்த விக்ரம், த்ரிஷா ஆகியோரை மீண்டும் இணைக்கவிருந்தார் டைரக்டர் ஹரி. முதலில் நடிக்க சம்மதம் சொன்ன த்ரிஷா, பின்னர் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் நடிக்கயிருந்த வேடத்தில் வேறு யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இருப்பினும், இந்தப் படத்தில் சாமி படத்தில் த்ரிஷா நடித்திருந்த சில காட்சிகள் இடம் பெறுகிறதாம். அதாவது, கடந்த காலத்தை விக்ரம் அசைபோடும் சில காட்சிகளில் த்ரிஷா வருகிறாராம். ஆக, சாமி-2 படத்தில் ஏதோ ஒரு வகையில் த்ரிஷாவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
படத்திலிருந்து ஒரேயடியாக விலகிவிட்டாலும், அவர் ஆரம்பகாலத்தில் நடித்த 'சாமி' படத்தின் சில காட்சிகள் 'சாமி 2' படத்தில் இடம்பெறுவதை ரசிகர்கள் பார்க்கலாம். த்ரிஷாவே 'சாமி 2' படத்திலும் நடிக்கவேண்டும் என விரும்பிய ரசிகர்களுக்கு இதுவே ஆறுதல்.


Click it and Unblock the Notifications











