Trisha: மீனாவுக்குப் பதிலாக த்ரிஷா... அதுவும் இந்த ஹீரோவுக்கு அம்மா கேரக்டரா..? அச்சச்சோ!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து கம்பேக் கொடுத்திருந்தார் த்ரிஷா.

அதனால் லியோ படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 Trisha: Actress Trisha is playing mother to Sharwanand in Bro Daddy Telugu remake

இரண்டாவது ரவுண்டில் இன்னும் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷா, இப்போது அம்மா கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்.

அதுவும் மீனாவின் கேரக்டரில் அவருக்குப் பதிலாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்மாவாகப் போகும் த்ரிஷா: மெளனம் பேசியதே திரைப்படத்தில் அறிமுகமான த்ரிஷா, சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா, தெலுங்கு, மலையாளம், இந்தி மொழியிலும் பல படங்கள் நடித்துள்ளார். சில வருடங்களாக சரியான வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார் த்ரிஷா.

ஆனால், 96, கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் த்ரிஷாவுக்கு சூப்பரான கம்பேக் கொடுத்தது. இதனால், விஜய்யின் லியோ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், பல படங்களுக்கும் த்ரிஷா கால்ஷீட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் 40 வயதான த்ரிஷா, இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே காலம் கடத்தி வருகிறார்.

இந்நிலையில், இதுவரை நாயகியாக மட்டுமே நடித்து வந்த த்ரிஷா, முதன்முறையாக அம்மா கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். அதுவும் 39 வயது இளம் ஹீரோ ஒருவருக்கு அம்மாவாக நடிக்க உள்ளது ரசிகர்களுக்கே ஷாக்கிங்காக அமைந்துள்ளது. கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான ப்ரோ டாடி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. பிருத்விராஜ் இயக்கிய இரண்டாவது படமான ப்ரோ டாடி, நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

மோகன்லால், மீனா, ப்ருத்விராஜ், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். முக்கியமாக பிருத்விராஜ்ஜுக்கு அம்மாவாக மீனா நடித்திருந்தார். தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாம். இதில் மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்க, அவரது மகனாக பிருத்விராஜ் ரோலில் ஷர்வானந்த் நடிக்கவுள்ளார். மேலும், மீனா கேரக்டரில் த்ரிஷா நடிக்கவிருக்கிறாராம். அதாவது ஷர்வானந்துக்கு அம்மாவாக த்ரிஷா நடிக்கவுள்ளாராம்.

ஷர்வானந்த் ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க, பங்கர்ராஜூ டைரக்ட் செய்கிறார். ப்ரோ டாடி தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. த்ரிஷா அம்மாவாக நடிப்பதை தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X