குந்தவையும் நந்தினியும் ஐ போனில் செல்ஃபி... ட்ரெண்டாகும் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் போட்டோ
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயும் த்ரிஷாவும் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வனில் த்ரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி கேரக்டரிலும் நடித்துள்ளனர்.
நந்தினி, குந்தவை லுக்கில், ஐஸ்வர்யா ராயும் த்ரிஷாவும் எடுத்துக்கொண்ட செல்ஃபி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

குந்தவையாக த்ரிஷா
மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இரண்டாம் பாகம் அடுத்தாண்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். த்ரிஷா குந்தவை கேரக்டரில் நடித்துள்ளது அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷாவின் கேரியரில் மிக முக்கியமான கேரக்டராக குந்தவை இருக்கும் என சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நந்தினியாக ஐஸ்வர்யா ராய்
அதேபோல், பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இந்தப் பாத்திரம் தான் பொன்னியின் செல்வனில் வில்லியாக இருக்கும் என்பதை ரசிகர்கள் யூகித்துவிட்டனர். குந்தவை, நந்தினி இரண்டு கேரக்டர்களுமே பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், விக்ரமுக்கு தங்கையாகவும் ஜெயம் ரவிக்கு அக்காவாகவும் த்ரிஷா நடித்துள்ளதும் ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது. இதனிடையே குந்தவை, நந்தினி இரண்டு பாத்திரங்களும் எதிரெதிர் துருவங்களில் பயணிக்கும் தன்மையுடையதாக இருக்கும்.

செட்டில் பேசவிடாத மணிரத்னம்
குந்தவை, நந்தினி என த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் இருவரது கேரக்டரையும் பின்னணியாக வைத்தே பொன்னியின் செல்வன் படத்தின் கதை ட்ராவல் ஆகும். இதுபத்தி பேசியிருந்த த்ரிஷா, " குந்தவையும் நந்தினியும் நண்பர்களாக இருக்க முடியாது, அதனால் அதிகம் பேச வேண்டாம். கேரக்டரின் தன்மைக்காக உங்கள் இருவருக்கும் இடையில் சிறிய போட்டி இருக்க வேண்டும்" என மணிரத்னம் கூறியதாக தெரிவித்து இருந்தார்.

குந்தவையும் நளினியும் செல்ஃபியில்
பொன்னியின் செல்வன் செட்டில் த்ரிஷாவும் ஐஸ்வர்யா ராயும் பேசாமல் இருந்த போதும், செல்ஃபி எடுத்து ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளனர். சோழர் காலத்தில் செல்போன்கள் எல்லாம் இருந்திருக்க வாய்ப்பே இல்லாத போது, குந்தவையும் நந்தினியும் செல்ஃபி எடுத்தால் எப்படி இருக்கும் என இந்த போட்டோ வெளிப்படுத்தியுள்ளது. த்ரிஷாவும் ஐஸ்வர்யா ராயும் தங்கத் தாரைகளாக ஜொலிக்க, அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டதை இன்னொருவரும் போட்டோ எடுத்துள்ளார். இந்த போட்டோவை த்ரிஷா தனது டிவிட்டரில் ஷேர் செய்ய, அது இப்போது சோஷியல் மீடியாஸில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











