நயன்தாரா முதல் அனுஷ்கா வரை.. கோலிவுட்டில் மீண்டும் பக்தி சீசன்?

சென்னை: மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா அடுத்ததாக அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அதேபோல் மாசாணி அம்மன் என்ற படத்தில் திரிஷா மற்றும் இன்னொரு தமிழ் படத்தில் அனுஷ்கா ஆகியோர் அம்மன் வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் மீண்டும் பக்தி சீசன் ஆரம்பித்துவிட்டதோ என்று கூறிவருகிறார்கள்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பக்தி படங்களுக்கு என்று எப்போதுமே தனி மவுசு இருக்கும். கறுப்பு வெள்ளை காலத்திலிருந்தே பக்தி படங்கள் பல இங்கு ஹிட்டடித்திருக்கின்றன. கே.ஆர்.விஜயா உள்ளிட்டோர் எல்லாம் அந்த மாதிரியான படங்களில் நடித்து தங்களது புகழை பெருக்கிக்கொண்டனர். நடிகைகள் மட்டுமின்றி நடிகர்கள் சிலரும் பக்தி படங்களில் நடித்தார்கள். அவர்களில் முக்கியமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் நடித்த திருவிளையாடல் படம் இன்றுவரை பலரது ஃபேவரைட்.

Nayanthara Trisha Anushka

கலர் சினிமாவிலும் பக்தி: காலம் செல்ல செல்ல தமிழ் சினிமா கொஞ்சம் எதார்த்த பாதைக்கு திரும்பியது. பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்தர், மகேந்திரன் போன்றோ கோலிவுட்டை எதார்த்த பாதைக்கு அழைத்து சென்றார்கள். அந்த சமயத்திலும் பக்தி படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. பீக் ஹீரோயின்களாக இருந்த மீனா, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், ரோஜா, கௌசல்யா உள்ளிட்டோரும் சாமி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்கள். அது அவர்களுக்கும் ஒர்க் அவுட் ஆகின.

அம்மன், பாளையத்து அம்மன்: குறிப்பாக சௌந்தர்யா நடித்த அம்மன், மீனா நடித்த பாளையத்து அம்மன் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வசூலிலும் சக்கைப்போடு போட்டது. அதிலும் 90ஸ் கிட்ஸுக்கு நாஸ்டாலஜி நினைவுகளையும் அந்தப் படங்கள் இன்றளவும் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அதில் அம்மன் படம் தெலுங்கில் வெளியாகி பிறகு தமிழில் ரீமேக் செய்யப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

மீண்டும் அம்மன் படங்கள்: 90களுக்கு பிறகு பெரும்பாலும் அம்மன் படங்கள் வரவில்லை. அந்த நிலையை ஆர்.ஜே.பாலாஜி சில வருடங்களுக்கு முன்பு மாற்றினார். அவர் நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதிலும் அம்மன் கெட்டப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன் நன்றாகவே செட் ஆனார் என்று ரசிகர்கள் ஓபனாகவே பேசினர். மேலும் அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்லபடியான வரவேற்பையே பெற்றது.

திரிஷா, அனுஷ்கா: இப்போது மீண்டும் அம்மன் படங்களின் பக்கம் கோலிவுட் பார்வை திரும்பியிருப்பதாக தெரிகிறது. அதாவது மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடிக்கிறார். அதேபோல் திரிஷாவும் மாசாணி அம்மன் என்ற படத்தில் நடிக்கவிருப்பதாகவும்; அதையும் ஆர்.ஜே.பாலாஜிதான் இயக்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் அனுஷ்காவும் தமிழ் படம் ஒன்றில் அம்மன் வேடம் ஏற்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்ற்னா. ஆகமொத்தம் இந்த 2கே கிட்ஸ் தலைமுறையிலும் அம்மன் அவதாரம் எடுக்கவிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X