மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா.. குறும்படம் விரைவில் ரிலீஸ்!

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் குறும்படத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.

Recommended Video

ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.. வீடியோவை வெளியிட்டார் த்ரிஷா!

கொரோனா பாதிப்பு காரணமாக வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலுமே ஷூட்டிங்ஸ் அனைத்தும் நிறுத்தபட்டதனால், எந்த வேலையும் நடைபெறவில்லை. இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே தனது அன்றாட வேலைகளை பதிவிட்டு போட்டோசாகவும், வீடியோக்களாகவும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அது இல்லாமல் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களையும் சிலர் வெளியிட்டு வருகிறார்கள்.

 Trisha and Gautham menon to joins for a short film

கொரோனா பற்றி அதிகம் பகிர்வதனால் கொரோனா சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு குறித்த சில குறும்படங்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஆதவ் கண்ணதாசன் இயக்கியிருந்த 'லாக் டவுன்' என்ற படம் வெளியானது. அப்படம் அனைவராலும் அதிகமாக பகிரப்பட்டது.

இந்நேரத்தில் தற்போது நடிகை த்ரிஷா, இயக்குனர் கெளதம் மேனனின் குறும்படத்தில் நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றையும் சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. அதில், 4K ஃபார்மெட்டில் எப்படி வீடியோ எடுப்பது என்பதை, வீடியோ காலில் விளக்குகிறார் கெளதம் மேனன் .

 Trisha and Gautham menon to joins for a short film

வீட்டிலிருந்தபடியே அதனை தனது மொபைலில் படமாக்கி, கெளதமுக்கு த்ரிஷா அனுப்புவார் என்று இந்த வீடியோவை பார்க்கும் நமக்கு நன்றாக புரிகிறது. விரைவில் இந்த குறும்படம் வெளியாகும் என ரசிகர்களிடையே மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

 Trisha and Gautham menon to joins for a short film

விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் ஆகிய கெளதம் மேனன் படங்களில் நடித்து சூப்பர் ஹிட் அடித்துள்ளார் த்ரிஷா. அடுத்த படியாக தற்போது இந்த குறும்படத்தில் இருவரும் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் "பேட்ட" படத்தில் நடித்திருந்த த்ரிஷா, தற்போது "பரமபதம் விளையாட்டு", "கர்ஜனை", "ராங்கி", "பொன்னியின் செல்வன்" ஆகிய படங்களில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின் மீதமுள்ள படப்பிடிப்புகள் நடக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X