Vidamuyarchi: நோ ரொமான்ஸ்.. ஆனாலும் அஜித்துக்கு ரெண்டு ஹீரோயின் ஜோடியாம்.. யாரு யாரு தெரியுமா?

சென்னை: பல மாதங்களாக இழுத்து அடித்துக் கொண்டிருக்கும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்னமும் இழுத்துக் கொண்டிருந்தாலும் ஒருவழியாக இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் துபாயில் ஆரம்பித்து விடும் என்கிற உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

மார்க் ஆண்டனி திரைப்படத்திலேயே முதல் முயற்சியில் ஆரம்பித்து கடைசியில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விடாமுயற்சி என்றே போட்டு விட்டார்.

Trisha and Huma Qureshi will pair opposite to Ajith in Vidamuyarchi

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஆரம்பம் மட்டுமில்லை அந்த படத்தில் 2 ஹீரோயின்கள் நடிக்கப் போகும் அட்டகாசமான தகவலும் தற்போது வெளியாகி இருப்பது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

அஜித்தின் மனைவியாக த்ரிஷா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் தளபதி விஜய்க்கு மனைவியாக நடித்துள்ள த்ரிஷா தான் அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் ஹீரோயின் என்பது கனஃபார்ம் ஆகி உள்ளது. அஜர்பைஜான் அல்லது துபாயில் இந்த மாத இறுதிக்குள் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிவிடும் என்றும் வெளிநாட்டில் சுற்றுலாவில் இருக்கும் த்ரிஷா அப்படியே ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித்துடன் இணைந்து த்ரிஷா ஜீ, க்ரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இணையும் வலிமை ஹீரோயின்: த்ரிஷா மட்டுமின்றி விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு இன்னொரு ஹீரோயினாக வலிமை படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Trisha and Huma Qureshi will pair opposite to Ajith in Vidamuyarchi

வலிமை படத்திலேயே இருவருக்கும் டூயட் காட்சிகள் இல்லாத நிலையில், விடாமுயற்சி படத்தில் ரெண்டு ஹீரோயின்களுக்குமே ரொமான்ஸ் காட்சிகள் இன்றி பவர்ஃபுல் பர்ஃபார்மன்ஸ் பண்ணுகிற ரோல் தான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாறுமாறாக தயாராகும் அஜித்: உலகையே பைக் மூலம் சுற்றி வரவேண்டும் என்கிற தனது கனவு பாதியளவுக்கு நிறைவேறிவிட்ட நிலையில், அதற்கு கொஞ்சம் பிரேக் விடுத்து விடாமுயற்சி படத்தை முடித்து விடும் நோக்கில் நடிகர் அஜித் அந்த படத்துக்காக தாறுமாறாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

படப்பிடிப்பு ஆரம்பித்த உடனே அதி விரைவாக ஷூட்டிங்கை குறுகிய நாட்களில் முடிக்க மகிழ் திருமேனி பக்கா பிளான் போட்டு வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X