Trisha And Nayanthara - த்ரிஷாவும் நயன்தாராவும் இணையப்போகும் படம் இதுவா?.. செம சம்பவமா இருக்குமே
சென்னை: Trisha And Nayanthara (த்ரிஷா நயன்தாரா) நடிகைகள் த்ரிஷாவும் நயன்தாராவும் ஒரு படத்தில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஸ்க்ரீனில் தலை காட்டியவர் த்ரிஷா. அதன் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் நடித்து படமும் வெளியாகிவிட்டது. முதல் படத்திலேயே த்ரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
முன்னணி நடிகை: முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் பப்ளியான ஹீரோயினைத்தான் கொண்டாடுவார்கள் என்ற மாயையை த்ரிஷா அடித்து நொறுக்கினார். அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அழகும், திறமையும் கூடிக்கொண்டே போக த்ரிஷாவுக்கு என்று ரசிகர்களும் கூடிக்கொண்டே போனார்கள். அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் த்ரிஷா.
குந்தவை த்ரிஷா: பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் த்ரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சில கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு த்ரிஷா தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. கடைசியாக அவரது நடிப்பில் லியோ வெளியானது. அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

நயன்தாரா: கோலிவுட்டில் த்ரிஷாவுக்கு எந்த அளவுக்கு க்ரேஸ் இருக்கிறதோ அதே அளவுக்கு நடிகை நயன்தாராவுக்கும் இருக்கிறது. குறிப்பாக அவர் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். ஐயா படத்தின் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டார்.

பாலிவுட் எண்ட்ரி: குறிப்பாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஜவான் படமும், இறைவன் படமும் வெளியாகின. ஜவான் படத்தில் நயனின் நடிப்பை பார்த்த பாலிவுட் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் தர ஆர்வத்துடன் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி த்ரிஷாவும், நயன்தாராவும் தங்களது பாதைகளில் தனித்துவமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் பல வருடங்களாக நடிகைகளுக்குள் போட்டி என்றால் அதில் முதல் இரண்டு இடத்தில் இவர்கள் இருவரும்தான் இருப்பார்கள்.
இணையும் படம்: இந்நிலையில் த்ரிஷாவும் நயன் தாராவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்திய சினிமாவின் அடையாளங்களாக பார்க்கப்படும் கமல் ஹாசனும் மணிரத்னமும் சேர்ந்து பணியாற்றவிருக்கிறார்கள். அந்தப் படத்தின் டீசர் ஷூட்டிங்கூட சமீபத்தில் நடந்தது. அந்தப் படத்தில்தான் த்ரிஷாவும், நயன்தாராவும் இணையவிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை இப்போது போய்க்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











