Vidaamuyarchi - விடாமுயற்சியில் இரண்டு ஹீரோயின்களாம்.. அதெல்லாம் சரி எப்போ ஷூட்டிங்?

சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அஜித். அவரது 62ஆவது படமாக இது உருவாகிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட அடுத்ததாக மகிழ் திருமேனி உள்ளே வந்தார். மகிழ் திருமேனியும் அட்டகாசமான இயக்குநர் என்பதால் துணிவு படம் போலவே விடாமுயற்சியும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

Trisha And Tamannaah Will Act in Vidaamuyarchi Movie

பைக் டூர்: படம் குறித்த அப்டேட் கடைசியாக மே 1ஆம் தேதி வெளியானது. அதோடு சரி அதற்கு பிறகு அஜித் டூர் செல்லும் அப்டேட்டுகள்தான் வெளியாகி வருகின்றன. இதனால் வலிமை பட அப்டேட்டுக்கு எப்படி ரசிகர்கள் காத்திருந்தனரோ அதேபோல் காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் அஜித்தோ பைக்கை எடுத்துக்கொண்டு உலக நாடுகளில் ஜாலியாக சுற்றிவருகிறார்.

விடாமுயற்சி ஷூட்டிங்: ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது முதற்கட்ட உலக சுற்றுப்பயணத்தை நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் மேற்கொண்டார். எனவே அதனை முடித்த கையோடு விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என நம்பப்பட்டது. ஆனால் அஜித்தோ திடீரென சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தார்.

Trisha And Tamannaah Will Act in Vidaamuyarchi Movie

லொக்கேஷன்: மறுபக்கம் மகிழ் திருமேனி லொக்கேஷன் பார்க்க சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது. இதனால் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஷூட்டிங் தொடங்கும் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்தது. நிலைமை இப்படி இருக்க வெளிநாட்டு டூரை முடித்துக்கொண்டு சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார் அஜித்குமார்.

மீண்டும் மீண்டுமா: ஆனால் திடீரென நார்வே உள்ளிட்ட நாடுகளில் தற்போது பைக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார் அஜித். இதன் காரணமாக விடாமுயற்சி நிலைமை என்னவென தெரியாமல் ஏகே ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால் கவலைப்படும்படி எதுவும் இல்லை இந்த டூரை அஜித் பத்து நாட்கள்தான் ப்ளான் செய்திருக்கிறார். இதனால் ஷூட்டிங் இந்த மாதத்துக்குள்ளேயே தொடங்கிவிடும் என தகவல் வெளியானது.

Trisha And Tamannaah Will Act in Vidaamuyarchi Movie

இரண்டு ஹீரோயின்கள்: இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இதில் த்ரிஷா மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் ஷூட்டிங் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்குவது உறுதி என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படம் தாமதம் ஆவதால் த்ரிஷா இதிலிருந்து விலகிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X