முகமெல்லாம் கோபம்.. விமான நிலையத்தில் அந்த கேள்வி.. விருட்டென கிளம்பிய திரிஷா.. என்ன ஆச்சு?

சென்னை: விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் நடிகை திரிஷா கோபத்துடன் வேகமாக சென்றது பரபரப்பை கிளப்பியுள்ளது. லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்ததில் இருந்தே திரிஷா குறித்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சமூக வலைதளத்தில் கிளம்பிக் கொண்டே இருந்தன.

மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி பேசியதும் உச்சகட்ட கோபத்துக்கு சென்றார். மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், கூவத்தூர் விவகாரத்திலும் திரிஷாவின் பெயர் அடிபட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க திரிஷா மாதிரி பொண்ணு என அந்த நபர் அப்படியே பம்மி விட்டார்.

Trisha avoids press and seems anger at the Airport video shocks fans

இந்நிலையில், சுசித்ரா டைரக்டாக திரிஷா குறித்து ஏகப்பட்ட விஷயங்களை தொடர்ந்து பேசி வரும் நிலையில் அதற்கு எதிராக விரைவில் திரிஷா பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷா பற்றி சுசித்ரா: சுச்சி லீக்ஸ் விவகாரத்தின் போது நடிகர் தனுஷுடன் நெருக்கமாக திரிஷா இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் திரிஷா பார்ட்டிகளில் லெஜண்ட்டாகவே இருப்பார் என்றும் எந்த டேர் வேண்டுமானாலும் அவர் செய்வார் என்றும் விஜய் வீட்டின் முன் திரிஷா ஆடியதும் ஒரு டேர் தான் என்றும் 2 நாட்களுக்கு ஒரு முறை விஜய் வீட்டில் பிரைவேட் பார்ட்டிகள் நடக்கும் என்றும் அதை கிரிஷ் மற்றும் சங்கீதா தான் ஏற்பாடு செய்வார்கள் என சுசித்ரா பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரிஷா குறித்து மோசமாக: தொடர்ந்து திரிஷா குறித்து படுமோசமாக சுசித்ரா பேசி வரும் நிலையில், அதற்கு எதிராக தனது கண்டனத்தை திரிஷா பதிவு செய்வார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து யூடியூப் சேனல்களில் திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் குறித்து சுசித்ரா படுமோசமாக பேசி வருவதை நிறுத்தவே இல்லை.

கோபத்துடன் சென்ற திரிஷா: இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விமான நிலையத்தில் நடிகை திரிஷாவை சந்தித்த செய்தியாளர்கள் அவரிடம் கில்லி ரீ ரிலீஸ் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதே அதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்கிற கேள்வியை எழுப்ப அதற்கு பதில் சொல்லாமல் நடிகை திரிஷா விருட்டென கிளம்பி சென்று விட்டார். திரிஷா ரொம்பவே கோபத்துடன் சென்றார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல படங்களில் பிஸி: லியோ படத்துக்கு பிறகு அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்த திரிஷா அந்த படம் சற்று ஹோல்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் ஐடென்டிட்டி மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விஸ்வம்பரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தளபதி 69 படத்திலும் திரிஷா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோட் படத்தில் டான்ஸ்: கில்லி படத்தின் ரீ ரிலீஸ் குறித்து சந்தோஷமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட திரிஷா அதுதொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்திலும் திரிஷா ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X