Trisha: த்ரிஷா துணை முதலமைச்சர் கூட ஆவாங்க.. உங்களுக்கு என்ன பிரச்னை.. ரெடி மோடில் தவெக தொண்டர்

சென்னை: முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் நடிகையும் முதலமைச்சர் விஜய்யின் தோழியுமான த்ரிஷா கலந்து கொண்டார். இது தொடர்பாக சில ரசிகர்கள் த்ரிஷா இந்த நிகழ்ச்சிக்கு வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று விமர்சித்தவர்களையும் பார்க்க முடிந்தது. இப்படி இருக்கையில், தவெக தொண்டர் ஒருவர் த்ரிஷா தான் தமிழ்நாட்டின் அடுத்த துணை முதலமைச்சர் என்று தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், சக தவெகவினர் மத்தியிலுமே பகீர் கிளப்பி உள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில், மக்கள் மத்தியில் முதலமைச்சராக விஜய் பேசியது, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் பேச பேச மிகவும் எமோஷ்னலான நடிகை த்ரிஷா, அவர் கண்களில் வந்த கண்ணீரை கட்டுப்படுத்தியபடி அமர்ந்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Trisha Can Even Become Deputy CM Says TVK Worker Amid Viral Political Buzz

அதாவது அந்த தவெக தொண்டர் கூறுகையில், " த்ரிஷா வந்தது குறித்து நான் என்ன கூறுவது, த்ரிஷா துணை முதலமைச்சராக வரட்டுமே, அதில் என்ன தவறு உள்ளது? அதில் உங்களுக்கு என்ன பிரச்னை? தமிழ்நாட்டின் தங்கத் தலைவி துணை முதலமைச்சராக வந்தால் கூட எங்களுக்கு பிரச்னை இல்லை. உங்களுக்கு என்ன பிரச்னை? விஜய் த்ரிஷா குறித்து கூறுவது எல்லாம் தவறு, அதெல்லாம் அப்படித்தான் இருக்கும். உங்களால் என்ன பண்ண முடியும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது இந்த பேச்சு, தவெக தரப்பினரே கட்சிக்குள் நடிகை த்ரிஷா மிகவும் முக்கியமான புள்ளியாகவும் உருவாவதை விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறார்கள் என்ற பேச்சையும் உருவாக்கி உள்ளது. இது மட்டும் இல்லாமல் விஜய் வென்ற இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்து தான் ஆகவேண்டும், ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கையில், த்ரிஷா போட்டியிட்டால் த்ரிஷாவின் அரசியல் வாழ்க்கையும் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X