60 படங்கள், 45 விருதுகள், 17 ஆண்டுகள் தமிழ் சினிமாவை கலக்கும் சென்னை பொண்ணு த்ரிஷா!

சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலும் ஹீரோயின்கள் கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து வந்து இங்கே தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருவார்கள்.

ஆனால், 2002ம் ஆண்டு மெளனம் பேசியதே படத்தில் அறிமுகமாகி 17 ஆண்டுகள் தமிழ் ரசிகர்களின் மனங்களில் ஜெஸ்ஸியாகவும் ஜானுவாகவும் ஆட்சி செய்து வருகிறார் நம்ம சென்னை பொண்ணு த்ரிஷா.

20 ஆண்டுகள்

2002ம் ஆண்டு சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் வெளியான மெளனம் பேசியதே படத்தில் த்ரிஷா நாயகியாக அறிமுகம் ஆனாலும், அதற்கு முன்னதாகவே 1999ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஓரிரு காட்சிகளில் நடித்துள்ளார் நடிகை த்ரிஷா.

டாப் ஸ்டார்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சித்தார்த், ஜீவா, விஜய்சேதுபதி என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் த்ரிஷா.

மெகா பிளாக்பஸ்டர்

சாமி, கில்லி, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும், விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, 96 என பல படங்கள் மெகா பிளாக்பஸ்டர் படங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது.

கதையின் நாயகி

ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். அவரது ஆக்‌ஷன் அவதாரத்தில் உருவாகி வரும் ராங்கி படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கர்ஜனை, பரமபதம் உள்ளிட்ட படங்களும் த்ரிஷா நடிப்பில் உருவாகி வருகின்றன.

கதாபாத்திரமாகவே வாழ்வார்

நடிகை த்ரிஷா இன்னொசன்ட் கேர்ளாகவும், போல்டான கேர்ளாகவும், கிராமத்து பெண்ணாகவும், வில்லியாகவும், மெச்சூரான கதாபாத்திரம் என எந்தவொரு கதாபாத்திரத்தை ஏற்றாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்வார் என இந்த ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.

60 படங்கள் 45 விருதுகள்

நடிகை த்ரிஷா இதுவரை 60 திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், 45க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். ஒன் அண்ட் ஒன்லி தென்னிந்திய குயின் என இந்த ரசிகர் புகழ்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X