அந்தப் பதிவை அதிரடியாக நீக்கிய நடிகை த்ரிஷா.. தனது முன்னாள் காதலரை பற்றிதான் அப்படிச் சொன்னாரா?
சென்னை: நடிகை த்ரிஷா தான் வெளியிட்டிருந்த பதிவை அதிரடியாக நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
இந்தி படங்களிலும் நடித்து வரும் இவர், இப்போது பிரபு சாலமன் இயக்கும் காடன் படத்தில் நடித்துள்ளார்.

பிரிந்துவிட்டோம்
பிரபலமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்த ராணா, சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர். ஒரு முறை, காபி வித் கரண் பேட்டியில், தான் த்ரிஷாவை காதலித்ததாகவும் ஒத்து வராததால் பிரிந்துவிட்டோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் இருவரும் நட்பைப் புதுப்பித்தனர். இருவரும் வீடியோ மூலம் பேசிக்கொண்ட செய்திகள் வெளியாயின.

மிஹீகா பஜாஜ்
இந்நிலையில் நடிகர் ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்தார். அவர் தனது காதலை ஏற்றுக் கொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் அறிவித்திருந்தார். அவரது புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். ஐதராபாத்தில் வளர்ந்த இன்டீரியர் டிசைனரான மிஹீகா பஜாஜ், ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நிச்சயதார்த்தம்
இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இதையடுத்து, தனது காதல் கதையை தெரிவித்த ராணா, சினிமாத்துறையை சேர்ந்த யாரையும் திருமணம் செய்து கொள்ள நினைத்ததில்லை என்று தெரிவித்திருந்தார். தனது காதலை அறிவித்த ராணாவுக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

சைக்கோபாத்ஸ்
ஆனால், நடிகை த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதற்கிடையே சமூக வலைத்தளத்தில், 'முன்னாள் காதலியை நெருங்கிய நண்பர்களாக வைத்திருப்பவர்கள் நார்சிஸ்ஸிஸ்டிக் சைக்கோபாத்ஸ்' என பதிவிட்டிருந்தார். அவர் ராணா பற்றிதான் அப்படி பதிவிட்டிருந்தார் என்று ரசிகர்கள் பரபரப்பாகக் கூறினர். இதையடுத்து அந்தப் பதிவை அதிரடியாக நீக்கிவிட்டாராம் த்ரிஷா.


Click it and Unblock the Notifications











