Trisha - காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது.. தாமதமாகும் விடாமுயற்சி.. வெளியேறினாரா த்ரிஷா?
சென்னை: Trisha (த்ரிஷா) விடாமுயற்சி படம் தொடங்க தாமதமாவதால் த்ரிஷா நடிக்கமாட்டார் என தகவல் வெளியாகியிருக்க்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் வெற்றி பெற்றது. இதனையடுத்து தனது 62ஆவது படத்தில் நடிக்கிறார் அஜித்குமார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். வாரிசுடன் களமிறங்கி துணிவு வெற்றி பெற்றதால் தனது 62ஆவது படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் அஜித் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கதையை தயார் செய்ய லேட்: இதனை அஜித்குமார் மகிழ் திருமேனியிடமும் கூறியதாகவும் அதனையொட்டிதான் கதையை உருவாக்குவதற்கு அவர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. அதேசமயம் படத்தின் பெயரான விடாமுயற்சிக்கு ரசிகர்களில் ஒரு தரப்பினர் விமர்சனத்தை முன்வைக்க, மகிழ் திருமேனியின் கதையும், மேக்கிங்கும் அட்டகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர்.
சுற்றுப்பயணம்: அஜித் தனது முதல்கட்ட வேர்ல்ட் டூரை அண்மையில் தொடங்கினார். நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் ரைட் செய்த அவர் கடந்த 8ஆம் தேதியோடு பயணத்தை முடித்து சென்னை திரும்பியிருக்கிறார். அஜித் இதுவரை எங்கெங்கு பைக்கில் சென்றிருக்கிறார் என்ற புகைப்படத்தை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதேபோல் அஜித் தனது அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் எனவும் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.
விடாமுயற்சியை விடாத பிரச்னை?: இந்தச் சூழலில் மே 22ஆம் தேதி விடாமுயற்சி ஷூட்டிங் சென்னையில் பூஜையுடன் தொடங்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இடையில் லைகாவில் நடந்த அமலாக்கத் துறை சோதனை காரணமாக அஜித் லைகாவுக்கு பதில் வேறு ஒரு நிறுவனத்துக்கு விடாமுயற்சி படத்தில் நடிக்கலாம் என்ற யோசனையில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை லைகா நிறுவனத்திடம் அவர் 40 கோடி ரூபாய் வரை அட்வான்ஸ் வாங்கிவிட்டார் எனவே லைகாவுக்குத்தான் விடாமுயற்சியில் நடிப்பார் என திரைத்துறை வட்டாரம் கூறுகிறது.
வெளியேறினாரா த்ரிஷா?: இதற்கிடையே படத்தில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து அவர் நடிப்பது உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், விடாமுயற்சி படம் தொடங்க தொடர்ந்து தாமதமாவதால் அந்தப் படத்துக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த டேட்டுகளையும் சேர்த்து கௌரவ் நாராயணன் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் படத்துக்காக கொடுத்துவிட்டார் என கூறப்படுகிறது. அந்தப் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் விடாமுயற்சிக்காக அந்தப் படத்தை விட்டுவிட வேண்டாம் என்ற முடிவுக்கு த்ரிஷா வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் கெட்டப்: சூழல் இப்படி இருக்க இயக்குநர் மகிழ் திருமேனியுடன் லொகேஷன் பார்ப்பதற்காக அஜித் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டில் இருந்தபடி அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. மேலும் இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் பேச்சு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











