Leo: அப்படி போடு.. விஜய்யின் லியோ படத்தில் த்ரிஷாவுக்கு இத்தனை கோடி சம்பளமா.. ஷாக்கான திரையுலகம்!

சென்னை: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வெகு காலமாக நயன்தாரா கோலோச்சி வரும் நிலையில், சமீப காலமாக நயன்தாராவை பின்னுக்குத் தள்ளி முன்னேறி வருகிறார் நடிகை த்ரிஷா.

ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் ஹீரோயின் ஆக நடித்த த்ரிஷாவுக்கு அதன் பிறகு கூட பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த யோகம் கோலிவுட்டில் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடித்து விட்டார் த்ரிஷா. இந்நிலையில், லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

20 ஆண்டுகளை கடந்து

20 ஆண்டுகளை கடந்து

ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்த த்ரிஷா அடுத்ததாக இயக்குநர் அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். சாமி, கில்லி, திருப்பாச்சி, க்ரீடம், குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன் என பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிடித்துள்ளார் த்ரிஷா.

பிரம்மாண்ட வெற்றி

பிரம்மாண்ட வெற்றி

கடந்த ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருந்தார். ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா நேருக்கு நேர் சந்திக்கும் அந்த ஃபேஸ் ஆஃப் காட்சி மற்றும் பெரிய பழுவேட்டரையர் சதி ஆலோசனை செய்யும் இடத்திற்கே சென்று இரு இளவரசர்களுக்கும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என பேசும் இடங்களில் செம ஸ்கோர் செய்திருப்பார் த்ரிஷா. 500 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில், த்ரிஷாவின் மார்க்கெட்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.

5வது முறையாக

5வது முறையாக

நடிகர் விஜய்யுடன் அதிகமுறை ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு த்ரிஷாவுக்கு லியோ படம் மூலம் அமைந்துள்ளது. கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என இதுவரை 4 முறை ஜோடியாக நடித்த த்ரிஷா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

காஷ்மீரில் ஜாலியாக

காஷ்மீரில் ஜாலியாக

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், ஒட்டுமொத்த படக்குழுவே செம ஜாலியாக இருப்பது அவர்கள் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே தெளிவாகி உள்ளன. தால் ஏரியில் படகு சவாரி, மகா சிவராத்திரி பூஜை என த்ரிஷாவும் தனக்கான ஸ்பேஸை அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்.

சம்பளம் எவ்வளவு

சம்பளம் எவ்வளவு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க நடிகை த்ரிஷாவுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், விஜய்யின் லியோ படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு அதிகபட்சமாக 3 முதல் 3.5 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏகே 62 வாய்ப்பு கிடைக்குமா

ஏகே 62 வாய்ப்பு கிடைக்குமா

விஜய்யின் லியோ படத்தில் த்ரிஷா நடித்து வரும் நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்திலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், மார்ச் மாதமே ஏகே 62 ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில், த்ரிஷாவுக்கு பதில் வேறு ஏதாவது நடிகை தான் ஏகே 62 படத்தில் நடிப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஸ்ருதிஹாசன் நடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X