அஜித்துக்கும் நாமத்தை போட்டுட்டாரே த்ரிஷா.. சூர்யா முதல் தனுஷ் வரை இதுக்கு முன்னாடி இத்தனை பேரா?

சென்னை: சினிமாவில் பல நடிகர்களை பிரேக்கப் செய்து கழட்டிவிட்ட நடிகையாக த்ரிஷா வலம் வருகிறார் என்றும் தற்போது அஜித்துக்கும் அதே நாமத்தை அவர் போட்டுள்ளார் என்கிற மீம் ஒன்று தீயாக பரவி சோஷியல் மீடியாவையே குபீரென சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

விடாமுயற்சி படத்தின் ஹாஷ்டேக் ஒரே நாளில் காணாமல் போன நிலையிலும் அந்த படத்தை பற்றிய ட்ரோல்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பரவி வருகின்றன. யாரு அந்த பிரகாஷ் என விஜய்யை வைத்து பல மீம்கள் சுற்றி வரும் நிலையில், தற்போது த்ரிஷா நாமம் போட்ட நடிகர்கள் லிஸ்ட் இதோ என இன்னொரு மீமும் வலம் வருகிறது.

vidamuyarchi trisha ajith kumar

மகிழ் திருமேனி என்ன காரணத்திற்காக தேவையில்லாமல், பிரேக் டவுன் படத்தின் கதையில் இல்லாத ஒரு விஷயத்தை திணித்து மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்தார் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

டிரெண்டிங்கில் த்ரிஷா: அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் மற்றும் அஜித் குமார் ஹாஷ்டேக் எல்லாம் டிரெண்டிங்கில் இருந்து ஒரே நாளில் காணாமல் போய்விட்ட நிலையில், இன்றும் டிரெண்டிங்கில் த்ரிஷா இருந்து வருகிறார். அதற்கு காரணம் அவரை வைத்து ஏகப்பட்ட மீம்களும் ட்ரோல்களும் குவிந்து வருவது தான் என்கின்றனர்.

vidamuyarchi trisha ajith kumar

த்ரிஷாவுக்கு நாமம் போட்டவர் அஜித்: ஹீரோயினாக த்ரிஷா அறிமுகம் ஆன மெளனம் பேசியதே படத்திலேயே அமீர் அவருக்கு எழுதிய கதாபாத்திரம் தான் பல படங்களிலும் தொடர்வதாக கூறுகின்றனர். அந்த படத்தில் சூர்யா த்ரிஷாவை காதலிக்க கடைசியில் த்ரிஷா இன்னொருவரை காதலிப்பதாக சொல்லி நாமத்தை போட்டுவிடுவார். அதன் பின்னர், விண்ணைத் தாண்டி வருவாயா, கொடி, 96 உள்ளிட்ட படங்களிலும் த்ரிஷா சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதிக்கு நாமத்தை போட்டார் என்றும் மங்காத்தா படத்தில் அஜித்திடம் அதெல்லாம் நடக்காது, அஜித் தான் த்ரிஷாவுக்கு நாமத்தை போட்டார் என ஏற்கனவே ஒரு மீம் வைரலானது.

அஜித்துக்கும் நாமம்: இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கும் த்ரிஷா நாமத்தை போட்டு விட்டார் என தற்போது அந்த மீமையே ரீ க்ரியேட் செய்து சோஷியல் மீடியாவில் மீம் க்ரியேட்டர்கள் அலப்பறையை கிளப்பி வருகின்றனர். இதெல்லாம் ரொம்ப ஓவர் ப்ரோ என்றும் த்ரிஷாவுக்குன்னே இப்படியான கதாபாத்திரங்கள் எப்படித்தான் அமைகிறதோ என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X