Trisha: இன்னமும் விஜய் எனக்கு காரப்பொரி வாங்கித் தரல.. லியோ வெற்றி விழாவை கலகலப்பாக்கிய திரிஷா!

சென்னை: நடிகர் விஜயுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி மற்றும் லியோ உள்ளிட்ட ஐந்து படங்களில் நடித்துள்ள திரிஷா லியோ வெற்றி விழாவில் பேசும்போது, நல்ல வேலை இந்தப் படத்தில் ஹரோல்ட் தாஸ் மூலமாக லோகேஷ் கனகராஜ் என்னை போட்டு தள்ளவில்லை. லியோ 2விலும் மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளது.

இன்னமும் எனக்கு விஜய் காரப்பொரி வாங்கித் தரவில்லை. நடிகர் விஜயுடன் இணைந்து நடிப்பது பழைய ஸ்கூல் ஃபிரண்டுடன் மீண்டும் கெட்டுகெதர் சென்றது போலத்தான் செம ஜாலியாக இருந்தது.

Trisha funny speech at Leo Success Meet grabs more fans attention

நல்லவேளை என்னை கொல்லல: சத்யா கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் எனக்கு கொடுத்ததற்கு ரொம்பவே நன்றி. நானும் எல்சியூவில் இடம்பெற்றது மகிழ்ச்சி என பேசி அரங்கத்தையே கலகலப்பாக்கி விட்டார்.

மேலும், நடிகர் அர்ஜுன் உடன் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறேன் அது தொடர்பான அறிவிப்பு கூடிய சீக்கிரமே வரும் என அஜித்துடன் இணைந்து நடிக்கும் விடாமுயற்சி குறித்த அப்டேட்டையும் திரிஷா லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசியுள்ளார்.

Trisha funny speech at Leo Success Meet grabs more fans attention

லியோ 2வில் மீண்டும்: நடிகை திரிஷா நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு நுழையும் போதே அவரது லுக் கில்லி படத்தில் இடம்பெற்ற அப்படி போடு பாடலில் வருவதை போலவே இருந்தது. மேலும், லியோ 2-வில் அப்படி போடு பாடல் இடம்பெறுமா என்கிற கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் வாய்ப்பே இல்ல ராஜா என்பது போல பதிலளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Trisha funny speech at Leo Success Meet grabs more fans attention

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயின் என்றும் நயன்தாராவும் அந்த படத்தில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மோகன்லால் உடனும் ராம் எனும் படத்தில் நடித்து வரும் த்ரிஷா டொவினோ தாமஸ் படத்திலும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X