Trisha: குந்தவை சர்ச்சை.. பார்த்திபனை கடுமையாக விமர்சித்த திரிஷா!
சென்னை: குந்தவை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது என நடிகர் பார்த்திபன், திரிஷா குறித்து பேசியது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கும் நிலையில் திரிஷா, பார்த்திபனின் பேச்சு முட்டாள்தனமான, அறிவு இல்லாத பேச்சு என கடுமையாக விமர்சித்துள்ளாதர்.
விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த இணையத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் நடிகை த்ரிஷாவுடன், விஜய் ஒரே காரில், ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
பார்த்திபன் பேச்சு: இதையடுத்து, நிகழ்வு ஒன்றில் பேசிய பார்த்திபனிடம், அவருடன் நடித்த நடிகைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய பார்த்திபன், குந்தவையை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது. நிறைய பிரச்சினைகளை வராமல் இருக்கும். எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது.

திரிஷா கண்டனம்: சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதைகளை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்" என்று பேசியுள்ளார். பார்த்திபனின் இந்த பேச்சு இணையத்தில் டிரெண்டான நிலையில், நடிகை திரிஷா, இன்ஸ்டாகிராமில் சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஒரு நிகழ்ச்சியில் என்னுடைய புகைப்படத்தையும், பெயரையும் காட்ட இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்னிடம் கூறினார். உதவியாளர் மூலம் வந்த கோரிக்கையின் அடிப்படையில் கடைசி நேரத்தில் என் பெயரும் புகைப்படமும் அந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டது. மைக்கேல் ஒரு கருத்தை கூறுவதால் அது புத்திசாலித்தனமாகவோ, நகைச்சுவையாகவோ மாறிவிடாது. அது முட்டாள்தனமாக பேசப்படுவதை இன்னும் அதிகமாக கேட்க செய்வதற்கே பயன்படும். அறிவு இல்லாமல் மரியாதையில்லாத வார்த்தைகளை பேசுவது, அந்த வார்த்தைகள் யாரை நோக்கி சொல்கிறார்களோ அவரைப் பற்றி அல்ல, அதை பேசும் நபரின் குணத்தைப்பற்றியே காட்டுகிறது என பார்த்திபனை கடுமையாக விமர்சித்துள்ளார் திரிஷா.


Click it and Unblock the Notifications











