தமிழகத்திலேயே 'அதி பயங்கரமான பிரபலம்' யார் தெரியுமான்னா...?
சென்னை: தமிழகத்திலேயே அதி பயங்கரமான பிரபலம் என்ற பெயர் நடிகை திரிஷாவுக்குக் கிடைத்துள்ளது.
ஒரு ஆன்லைன் சர்வேயில் இதைத் தெரிவித்துள்ளனர். இன்டர்நெட் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான மெக்காபி நடத்திய சர்வேயில்தான் இது தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட வைரஸ் பாதிப்புக்குள்ளான இணையதளங்களில் நடத்திய ஆய்வில், திரிஷா என்ற பெயருடைய வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்ததாக இந்த நிறுவனம் கூறுகிறது.

வைரஸ் தேடுதல்வேட்டை....
தமிழகத்தைச் சேர்ந்த பிரபலமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என சகல தரப்பினரையும் உள்ளடக்கிய வைரஸ் தேடுதலை நடத்தியது மெக்காபி.

திரிஷா வைரஸ்....
அதில் அதிக அளவிலான வைரஸ் யாருடைய பெயரில் வருகிறது என்பதை இவர்கள் ஆராய்ந்தனர். அதில் திரிஷாவின் பெயரில்தான் அதிக அளவிலான வைரஸ் பரப்பப்படுவதாக தெரிய வந்ததாம்.

நடிகர்கள் பெயரிலும்....
சூர்யா, ஆரியா, விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோருடைய பெயர்களிலும் வைரஸ் பரப்பப்படுகிறதாம்.

பிரபல நடிகைகள் பெயரில்....
நடிகைகள் சமந்தா, ஷ்ரேயா, ஸ்ருதி ஹாசன் ஆகியோரது பெயர்களிலும் அதிக அளவிலான வைரஸ்கள் பரவுகின்றனவாம்.

திரிஷா தான் டாப்....
இவர்களை விட திரிஷாவின் பெயரில்தான் அதிக அளவிலான வைரஸ் படையெடுப்பு நிகழ்கிறதாம்.

இண்டர்நெட் விஷமிகள்....
இணையதளங்களில். மொத்தத்தில் இந்த பத்து பேருடைய பெயர்களில்தான் அதிக அளவில் பாதுகாப்பு குளறுபடிகளைச் செய்கின்றனராம் விஷமிகள்.

இண்டர்நெட் திருடர்கள்...
பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி மால்வேர்களை அனுப்பி கம்ப்யூட்டர்களில் உள்ள முக்கியத் தகவல்கள், இணையதளங்களில் உள்ள தகவல்கள், பாஸ்வேர்ட்களைத் திருடுகின்றனராம் இந்த திருடர்கள்.

பிரபலங்களின் பெயர்களில் மால்வேர்கள்....
இந்த விஷமிகளின் முக்கிய ஆயுதமே வால் பேப்பர்கள், நிர்வாணப் படங்கள், வீடியோக்கள்தான். இந்த ரூபத்தில்தான் பிரபலங்களின் பெயர்களில் இவர்கள் மால்வேர்களை அனுப்புகின்றனராம்.


Click it and Unblock the Notifications











