GOAT மட்ட பாடல்.. திரிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவா?.. அடேங்கப்பா பெரிய தொகையா இருக்கே

சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ஃபேவரைட். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடியிருந்தார் திரிஷா. அது தியேட்டர்களில் பெரும் சரவெடியாக இருந்தது. மேலும் இருவருக்குமான கெமிஸ்ட்ரி இன்னமும் அப்படியே இருக்கிறதே என்று ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியமடைந்தனர். இந்நிலையில் அந்தப் பாடலுக்கு திரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர்; அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். இப்போது கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் விஜய்தான் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். GOAT படமும் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிட்டது. எனவே இப்படிப்பட்ட வியாபாரத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு அவர் வருவதை பலரும் பாராட்டிவருகிறார்கள். அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

vijay trisha goat

கடைசி படம்: விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். அது முழுக்க முழுக்க அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக அமையும் என்று வினோத் கூறியிருக்கிறார்.அதேசமயம் விஜய் நடிப்புக்கு டாட்டா சொல்வது ரசிகர்களை சோகமடைய செய்தாலும்; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது மனக்கணக்கு பலிக்கவில்லை என்றால் கண்டிப்பாக விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார் என்று ஒருதரப்பினர் ஆணித்தரமாக சொல்கிறார்கள்.

இப்போதே களத்தில்: இருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய தாக்கத்தை வீரியமாக காட்ட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் விஜய். அதற்கான முன்னெடுப்புகளில் விஜய் இப்போது தீவிரமாக களமாட ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும், பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அது விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. அதேபோல் இன்று அரசியல் கட்சியாக தவெகவை அங்கீகரித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

vijay trisha goat

மட்ட பாடல்: இதற்கிடையே GOAT படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடியிருக்கிறார். இதுவரை அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதென்பது அரிது. இப்போது விஜய்யுடன் ஆடியிருப்பதால் அவருக்கும், விஜய்க்கும் உள்ள நட்பு அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. மேலும் இருவருக்குமான கெமிஸ்ட்ரியையும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினார்கள்.

திரிஷாவின் சம்பளம்: திரிஷாவும் அந்தப் பாடலுக்கு நடனமாடியது குறித்து மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் போஸ்ட்டும் செய்திருந்தார். இந்நிலையில் மட்ட பாடலுக்காக திரிஷா வாங்கியதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது. அதன்படி இந்தப் பாடலுக்கு அவர் 4 கோடி ரூபாயிலிருந்து ஐந்து கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்தத் தகவலில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X