த்ரிஷாவும், ராணாவும் காதலிக்கவே இல்லையாம்: உலகமகா நடிப்புடா சாமி
மும்பை: தானும், த்ரிஷாவும் எப்பொழுதுமே காதலித்தது இல்லை என்று நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் பல காலம் காதலித்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. இந்த காதல் முறிந்த பிறகு த்ரிஷாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமண நிச்சயதார்த்தம் வரை வந்துள்ளது.
இந்நிலையில் த்ரிஷா பற்றி ராணா மும்பையில் பேசியுள்ளார்.

ராணா
நானும், த்ரிஷாவும் காதலித்ததே இல்லை. அவர்களாக கற்பனையாக செய்தி வெளியிட்டார்கள். அதை முதல் முறை பார்த்தபோது ஒரு நாளிதழுக்கு இது குறித்து பேட்டியளித்தேன். ஆனால் அவர்களோ நான் காதலை மறுத்ததை ஒற்றை வரியில் செய்தி வெளியிட்டனர்.

உண்மை
த்ரிஷாவுடன் காதல் என்று இல்லாத ஒன்றை கூறுகையில் அது என்னை பாதித்தது. காதல் இல்லை என்று எத்தனை முறை கூறி நேரத்தை வீணடித்துள்ளேன்.

த்ரிஷா
த்ரிஷா என்னுடைய தோழி. அண்மையில் கூட அவரையும், வருணையும் கோவாவில் சந்தித்தேன். நாங்கள் ஒன்றாக பார்ட்டிக்கு சென்றோம்.

சிங்கிள்
நான் மிங்கிளாகத் தயாராக இல்லாத சிங்கிள் ஆள். காதலிக்க தற்போது எனக்கு நேரம் இல்லை. ஒரு நாள் ஹைதராபாத்தில் மறுநாள் மும்பையில் அடுத்த நாள் டெல்லியில் இருப்பவரை யார் காதலிப்பார்கள் என்றார் ராணா.


Click it and Unblock the Notifications











