»   »  'டார்லிங்' தந்த தெம்போடு த்ரிஷா இல்லன்னா நயன்தாராவில் ஜி.வி. பிரகாஷ்

'டார்லிங்' தந்த தெம்போடு த்ரிஷா இல்லன்னா நயன்தாராவில் ஜி.வி. பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பென்சில் படம் மூலம் ஹீரோவானார். ஆனால் அந்த படத்திற்கு முன்பு அவர் நடித்த டார்லிங் என்ற பேய் படம் ரிலீஸானது. கோலிவுட் ரசிகர்கள் டார்லிங் படத்திற்கு அமோக வரவேற்பு அளித்துள்ளனர். இதனால் ஜி.வி. பிரகாஷ் மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்நிலையில் அவர் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் துவக்க விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி துவங்குகிறது.

ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ்

படத்தில் ஜி.வி. பிரகாஷ் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடிக்கிறார். மேலும் படத்திற்கான இசை வேலையையும் ஜி.வி. கவனித்துக் கொள்கிறார்.

ஹீரோ

ஹீரோ

ஆதிக் என்னிடம் கதையை கூறியதுமே இந்த படம் நிச்சயம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் தான் பொருத்தமானவர் என்று நினைத்தேன் என்றார் தயாரிப்பாளர் ஜெயகுமார்.

ஆனந்தி

ஆனந்தி

ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். இந்த படம் நிச்சயம் இளைஞர்களை கவர்ந்திருழுக்கும் என்று தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

English summary
Trisha Illana Nayanthara movie launch was held in Chennai recently. The shoot will commence from january 22nd.
Please Wait while comments are loading...