Trisha or Nayanthara - த்ரிஷா இல்லனா நயன்தாரா.. விக்னேஷ் சிவன் எடுத்திருந்த முடிவு தெரியுமா?
சென்னை: Trisha or Nayanthara (த்ரிஷா இல்லனா நயன்தாரா) இயக்குநர் விக்னேஷ் சிவன் எடுத்திருந்த முடிவு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனை பார்த்த ச்ச இது மிஸ் ஆகிடுச்சே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படத்திலேயே சிம்புவை ஹீரோவாக கமிட்டாக்கி கவனம் ஈர்த்தார். அதேபோல் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, நடிகை ஷோபனா என பெரிய ஸ்டார் வேல்யூவுடன் படம் உருவானது. ஸ்டார் வேல்யூ மட்டுமின்றி கதை ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நானும் ரௌடிதான்: 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து விஜய் சேதுபதி ஒத்துக்கொள்ள நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.
நயன்தாராவுடன் திருமணம்: இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களது பெயர்களை சமீபத்தில்தான் நயன்தாரா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

காத்து வாக்குல ரெண்டு காதல்: இதற்கிடையே இருவரது திருமணம் நடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், விக்னேஷ் சிவன் மேக்கிங் சுத்தமாக எடுபடவில்லை என்றும் ரசிகர்களில் ஒரு தரப்பினர் வெளிப்படையாகவே கூறினர்.

முதலில் த்ரிஷாதான்: இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முதலில் சமந்தா கதாபாத்திரத்திற்கு பதில் த்ரிஷாவை நடிக்க வைப்பதுதான் விக்னேஷ் சிவனின் திட்டமாக இருந்ததாம். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முதலில் த்ரிஷாவும், நயன்தாராவும்தான் நடிப்பதாக இருந்தது.
அப்போது த்ரிஷா இந்தப் படத்தில் நடிக்காததால் அந்த சமயத்தில் படத்தை செய்ய முடியவில்லை. எனவேதான் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினேன். அதன் பிறகு சமந்தாவிடம் படம் குறித்து பேசினேன் முதலில் தயக்கம் காட்டிய அவர் பின்னர் நடிக்க ஒத்துக்கொண்டார்" என்றார்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா: காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கதையானது, ஒருவர் இரண்டு பேரை காதலிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும். தற்போது விக்னேஷ் சிவனின் இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள், வடிவேலு ஒரு படத்தில் த்ரிஷா இல்லனா நயன்தாரா என கூறியிருப்பார். ஒருவேளை காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் த்ரிஷா நடித்திருந்தால் த்ரிஷா இல்லனா நயன்தாரா என வடிவேலு சொன்னதை ஸ்க்ரீனில் நிஜமாகியிருக்கும். மிஸ் ஆகிடுச்சே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











