For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்றும் பதினாறு!: சினிமாவில் 16 வருஷமாய் ஜொலிக்கும் த்ரிஷா

  |

  சென்னை: 16 வருடங்களாக என்றும் 16கவே இருக்கும் த்ரிஷாவின் திரைவாழ்க்கையை சற்று உற்று நோக்கலாம்.

  நடிகை த்ரிஷா விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கும் 96 திரைப்பட டீசர் வெளியானதும் த்ரிஷாவா இது என ரசிகர்கள் வாயைப் பிளந்தனர். த்ரிஷாவின் இளமை ததும்பும் அழகும் அந்த காந்தப்பார்வையும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

  இப்போது அவரின் நீண்ட நாள் ஆசையான ரஜினியுடன் நடிப்பது நிறைவேறியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினி படத்தில் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

  இந்திய திரையுலகில் இருக்கும் பல முக்கிய கதாநாயகர்களுடன் நடித்த ஒரு சில நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர்.

  சினிமா என்ட்ரி

  சினிமா என்ட்ரி

  மிஸ் சென்னை பட்டம் வென்ற பிறகு ஜோடி திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமானார் த்ரிஷா. அதன்பிறகு சூர்யாவுடன் மௌனம் பேசியதே திரைப்படம் கவனம் பெற்றது. பிறகு சூர்யாவுடன் ஆறு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

  சாமி

  சாமி

  சாமி திரைப்படத்தில் முரட்டு போலீஸை மிளகாய்பொடி தூவி லவட்டும் பெண்ணாக நடித்தது அனைவரையும் கவர்ந்தது. கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா என த்ரிஷா கேட்டதை தமிழகமே பேசியது. பிறகு பீமா திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்தார். முதல் மழை, ரகசிய கனவுகள் பாடலில் ஜொலித்தார்.

  கில்லி

  கில்லி

  கில்லி திரைப்படத்தில் விஜய்யுடன் அவர் ஓடிய ஓட்டம் படத்தை பல நாட்கள் தியேட்டரில் ஓடவைத்தது. பக்கத்து வீட்டு பெண் போல பரிதாபத்தோடு பார்த்தான் தமிழ் ரசிகன். அதன்பிறகு திருப்பாச்சி, ஆதி, குருவி என விஜய்யுடன் ஒரு ரவுண்ட் அடித்தார் த்ரிஷா. திருப்பாச்சியில் கும்பிடபோன தெய்வம் பாடல் பேயாட்டம் போட வைத்தது.

  கிரீடம்

  கிரீடம்

  அஜித்துடன் ஜி படத்தில் நடித்தார் த்ரிஷா. பிறகு கிரீடம் திரைப்படம் த்ரிஷாவுக்கு கிரீடம் வைக்கும் அளவுக்கு பேசப்பட்டது. அக்கம்பக்கம் பாடலில் வரும், நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே... ஓர் அகராதி... என்ற வரிகள் அஜித்துக்காக பிரத்தியேகமாக த்ரிஷாவே பாடியதுபோல் அமைந்தது. தல ரசிகர்கள் உச்சிக்குளிர கொண்டாடினர். பிறகு மங்காத்தாவில் அஜித்திடம் ஏமாந்தாலும், என்னை அறிந்தால் படத்தில் அதை ஈடுசெய்துகொண்டார்.

  சிம்பு

  சிம்பு

  ஜெஸ்ஸி என்ற பெயரை ஒரு நூற்றாண்டுக்கு மறக்கமாட்டான் தமிழன். சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இணைந்தார். சிம்புவை கவனிக்காமல் மாடிக்கு செல்வது, அடிக்கடி கோபித்துக்கொண்டு நடப்பது, என படத்தின் மொத்த ஃப்ரேம்களையும் த்ரிஷா ஆக்கிரமித்து லவ் டார்ச்சர் செய்தார். த்ரிஷாவின் அழகை ஆராதித்த கௌதம் மேனனுக்கு ரசிகர்கள் நன்றிக்கடன் பட்டார்கள்.

  மாதவன்

  மாதவன்

  உலகநாயகனையும் நான் விட்டு வைக்க மாட்டேன் என மன்மதன் அம்பு மற்றும் தூங்காவனம் திரைப்படங்களில் நடித்தார். லேசா லேசா திரைப்படத்திற்கு பிறகு மாதவனுடன் இணைந்த படம் மன்மதன் அம்பு ஆகும். தூங்காவனம் திரைப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக கமல்ஹாசனுடன் சண்டையும் போட்டார். தனுஷுடன் கொடி படத்தில் எதிர்நாயகியாக டிஸ்டிங்ஷன் வாங்கினார். இதேபோல் ஜீவா, விஷால், ஜெயம் ரவி, ஆர்யா, மாதவன், சித்தார்த் என பலருடனும் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள 96 திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

  தெலுங்கு

  தெலுங்கு

  மலையாளத்தில் நிவின் பாலியுடன் "ஹேய் ஜூட்", கன்னடத்தில் புனித்ராஜ்குமாருடன் "பவர்", இந்தியில் அக்ஷய் குமாருடன் "கட்டா மீத்தா", தெலுங்கில் பிரபாஸுடன் "வர்ஷம்" "பௌர்ணமி" "புஜ்ஜிகாடு" மகேஷ்பாபுவுடன் "ஆத்தடு", "சைனிக்குடு", ஜூனியர் என்டிஆருடன் "தம்மு" சிரஞ்சீவியுடன் "ஸ்டாலின்" என கலக்கியுள்ளார். இப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடனும் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.

  English summary
  Actress Trisha is celebrating her 16th year in film industry.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X