நடப்பதை பார்த்தால் ஆர்யாவும், த்ரிஷாவும் கல்யாணம் பண்ணிப்பாங்களோ?
Recommended Video

சென்னை: ஆர்யாவை திருமணம் செய்ய காத்திருப்பதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
த்ரிஷாவுக்கும் சரி, ஆர்யாவுக்கும் சரி இன்னும் திருமணம் கை கூடி வரவில்லை. த்ரிஷாவின் திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிட்டது. படங்களில் நடிக்க தடை விதித்ததால் திருமணத்தை நிறுத்தியதாக த்ரிஷா கூறினார்.
ஆர்யா டிவி நிகழ்ச்சி வரை சென்றுவிட்டு எந்த பெண்ணையும் தேர்வு செய்யாமல் வந்துவிட்டார்.
திருமணம்
நீங்களும், ஆர்யாவும் ஏன் திருமணம் செய்யக் கூடாது? நீங்கள் நல்ல ஜோடியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்று ரசிகர்கள் ஒருவர் த்ரிஷாவிடம் கேட்டார்.
த்ரிஷா
ரசிகர் கேட்ட கேள்விக்கு த்ரிஷா அளித்த பதில் தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஆர்யாவை திருமணம் செய்ய காத்திருப்பதாக கூறியுள்ளார் அவர்.
கல்யாணம்
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று ஆர்யா த்ரிஷாவிடம் கேட்டுள்ளார்.

முதல் முறை அல்ல
ஆர்யாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, அடப்போங்கடா இந்த மனுஷன் ஒரு நடிகையிடம் ட்விட்டரில் ப்ரபோஸ் செய்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல. அப்படியே த்ரிஷாவை கட்டிட்டாலும் என்று அலுத்துக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











