விஜய்க்கு திரிஷா வைத்த "ஆப்பு.." ஒரு போட்டோவால் வந்த வினை.. பறக்கும் கிசுகிசுக்கள்

சென்னை: நடிகர் விஜய்யுடன் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து லியோ படத்தின் மூலம் இணைந்துள்ள த்ரிஷா நடிகர் விஜய்க்கே லியோ படத்தில் துரோகம் செய்யப் போவதாக மீம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ எல்சியூ படம் தான் என ஏகப்பட்ட சிக்னல்கள் கிடைத்துள்ளன.

Trisha is the main villain in Vijays Leo memes goes trending

இந்நிலையில், ரோலக்ஸின் ஆள் தான் த்ரிஷா என புதிய உருட்டை த்ரிஷாவின் கையில் போட்டுள்ள டாட்டூவை வைத்து சூர்யா ரசிகர்கள் கிளப்பி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் மனைவியாக: நடிகை த்ரிஷா லியோ படத்தில் விஜய்யின் மனைவியாக ஒரு குழந்தைக்கு தாயாக நடித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த படத்தின் மெயின் வில்லியே த்ரிஷா தான் என தற்போது மீம்களை போட்டு வடசென்னை படத்தையே ஓட்டி வருகின்றனர்.

ரோலக்ஸோட ஆள்: நடிகை த்ரிஷா விஜய்யோட மனைவி போல நடித்து கடைசியில் தான் ரோலக்ஸோட ஆள் என மாறி விஜய்க்கே வேட்டு வைக்கப் போகிறார் என சமீபத்தில் வெளியான த்ரிஷாவின் போட்டோவில் அவர் கையில் இடம்பெற்றிருந்த புதிய தேள் டாட்டூவை வைத்து லோகேஷுக்கே எல்சியூ ஐடியா கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.

Trisha is the main villain in Vijays Leo memes goes trending

இருந்தாலும் இருக்கும்: மங்காத்தா படத்தில் த்ரிஷாவின் அப்பாவையே அஜித் தள்ளி விட்டு தாறுமாறு செய்வது போல லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் வெறித்தனமான ட்விஸ்ட் வைக்கிறேன் என குந்தவையை வைத்து பெரிய சம்பவத்தையே பிளான் பண்ணினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே தனுஷின் கொடி படத்திலேயே த்ரிஷா வில்லியாக மிரட்டியிருப்பார். அதனால், விஜய்க்கும் வில்லியாக த்ரிஷா மாறுவாரா இல்லையா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம் என்கின்றனர்.

எல்சியூவுக்கு வாய்ப்பு இல்லை: லியோ படம் எல்சியூவாக இருந்தால் விஜய்யுடன் சூர்யா, கமல், கார்த்தி எல்லாம் ஒரே ஃபிரேமில் கொண்டு வரும் கிளைமேக்ஸை லோகேஷ் கனகராஜ் எடுத்திருந்தால் படம் 1000 கோடியை அசால்ட்டாக தாண்டுமே என்றும் இதெல்லாம் நடந்தால் நல்லா இருக்கும். ஆனால், நடக்குமா என்பது சந்தேகம் தான் என்றும் லியோ விஜய் படமாகத்தான் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X