நடிக்க மறுத்த நயன்.. மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை? எகிறும் எதிர்பார்ப்பு!

சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ஈஸ்வரன். இந்தப் படத்திற்காக நடிகர் சிம்புவும் உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக ஃபார்முக்கு வந்தார்.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது சிம்பு மாநாடு, பத்துதல என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக உள்ளார்.

ஏஆர் ரஹ்மான் இசை

ஏஆர் ரஹ்மான் இசை

மாநாடு படத்திற்கு பிறகு ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறுது. பத்து தல படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா

இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் சிம்பு. இதுதொடர்பான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஏற்கனவே சிம்பு கவுதம் மேனன் கூட்டணியில் விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியாகி பட்டையை கிளப்பியது.

லாக்டவுன் நேரத்தில்..

லாக்டவுன் நேரத்தில்..

அதனை தொடர்ந்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார் கவுதம் மேனன். லாக்டவுன் நேரத்தில் போனிலேயே இந்தப் படத்தை இயக்கியிருந்தார் கவுதம் மேனன்.

நயன்தாராவிடம் பேச்சு

நயன்தாராவிடம் பேச்சு

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் நீட்சியாக குறும்படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் சிம்பும் த்ரிஷாவும் நடித்திருந்தனர். இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

த்ரிஷாவுடன் பேச்சு

த்ரிஷாவுடன் பேச்சு

ஆனால் நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கவுதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

வேற லெவல் கெமிஸ்ட்ரி

வேற லெவல் கெமிஸ்ட்ரி

ஏற்கனவே சிம்புவுக்கு ஜோடியாக அலை மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இதில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரியும் வேற லெவலில் இருந்தது.

ப்ரி புரடெக்ஷன்

ப்ரி புரடெக்ஷன்

இந்நிலையில் கவுதம் மேனனின் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான ப்ரிபுரடெக்ஷன் பணிகளை தொடங்கிவிட்டார் கவுதம் மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X