தளபதி 67ல் த்ரிஷா.. இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே.. லீக்கான லிஸ்டால் பறக்கும் மீம்ஸ்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பேனரில் இயக்கப் போவதாக அறிவித்த நிலையில், அதிரடியாக படகுழுவினர் ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் பறந்து சென்றுள்ளனர்.

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் படக்குழு மொத்தமும் ஷூட்டிங்கிற்காக செல்லும் ஒட்டுமொத்த லிஸ்ட்டே லீக்கான நிலையில், விஜய் ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இப்படி பிப்ரவரி 1 முதல் 3 வரை அப்டேட் கொடுக்க வச்சிருந்த எல்லா விஷயத்தையும் லீக் பண்ணிட்டீங்களே என கலாய்த்து வருகின்றனர்.

தளபதி 67 ஸ்டார்ட்

தளபதி 67 ஸ்டார்ட்

ஆரம்பிக்கலாமா என விக்ரம் படத்தை ஆரம்பித்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்த வேட்டைக்கு தளபதி 67 படத்தை ஆரம்பித்துள்ளார். ரோஜா படத்திற்கு பிறகு காஷ்மீரில் அதிகமாக தமிழ் படங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கை அங்கே நடத்த ஸ்ரீநகருக்கு படக்குழுவினர் புறப்பட்டுள்ளனர்.

லீக்கான லிஸ்ட்

லீக்கான லிஸ்ட்

தளபதி 67 படத்தில் நடிகர்கள் சத்யராஜ், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருவது குறித்த அதிகாரப்பூர்வ அப்டே வெளியாகும் முன்னதாகவே லிஸ்ட் லீக் ஆகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில் ஊட்டியில் மிஷ்கின், சாண்டி மாஸ்டரின் போர்ஷன் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரெண்டாகும் த்ரிஷா

டிரெண்டாகும் த்ரிஷா

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து அசத்திய நடிகை த்ரிஷா அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார். சமந்தா நடிக்க வேண்டிய ரோல் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக இந்த ரோல் த்ரிஷாவுக்கு சென்றதாக கூறுகின்றனர். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்த த்ரிஷா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் உடன் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், ஹாஷ்டேக் த்ரிஷா டிரெண்டாகி வருகிறது.

விமான நிலையத்தில் த்ரிஷா

விமான நிலையத்தில் த்ரிஷா

மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீநகருக்கு பறந்து செல்ல த்ரிஷா மாஸ்க் அணிந்து செம சைலன்ட்டாக நடந்து செல்லும் லேட்டஸ்ட் புகைப்படங்களும் வெளியாகி சோஷியல் மீடியாவை தெறிக்க விட்டு வருகிறது. நாளை முதல் தளபதி 67 அப்டேட்கள் குவிய உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் செம ஹாப்பியில் உள்ளனர்.

சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே

சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே

த்ரிஷா, சத்யராஜ், பிரியா ஆனந்த் என அடுத்த 4 நாட்களுக்கு வச்சிருந்த அப்டேட்டை இப்படி மொத்தமா லீக் பண்ணி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டா என தளபதி 67 டீம் இப்போ புலம்பித் தவிக்கும் என மீம் போட்டு நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

விமான நிலையத்தில் விஜய்

தளபதி 67 டீம் உடன் நடிகர் விஜய் விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ காட்சி ஒன்றும் தற்போது லீக் ஆகி வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. பீஸ்ட், வாரிசு படம் ரசிகர்களை பெரும் அளவில் கவராத நிலையில், தளபதி 67 படம் சம்பவம் பண்ணும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்த படமும் LCU என்றே அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவி கிளம்பிட்டாங்க

தலைவி கிளம்பிட்டாங்க

போட்றா பிஜிஎம்மை.. தளபதி 67 படத்துக்கான ஷூட்டிங்கிற்காக காஷ்மீருக்கு தலைவி த்ரிஷா கிளம்பிட்டாங்க என ரசிகர்கள் த்ரிஷா ஹாஷ்டேக்கை தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2, தளபதி 67 என வெயிட்டு காட்ட காத்திருக்கிறார் த்ரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X