6வது முறை விஜய்யுடன் இணையும் திரிஷா.. அட எந்த படத்தில் தெரியுமா?.. இப்படியொரு சர்ப்ரைஸா இருக்கே!

சென்னை: நடிகர் விஜய்யுடன் இதுவரை 5 முறை இணைந்து நடித்துள்ள நடிகை திரிஷா 6வது முறையாக இணைந்து நடிக்கப்போவதாக சூடான தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளன. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து தளபதி 69 படத்தில் விஜய் கடைசியாக சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா நடிக்க உள்ள விக்ரம் 3 படத்தில் விஜய் எல்சியூவில் லியோவாக மீண்டும் வருவாரா என்பது கூட சந்தேகம் தான்.

Trisha joins with Vijay in GOAT movie deets leaked

எல்சியூவின் எண்ட்கேம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவே இன்னும் ஒரு 5 ஆண்டுகள் ஆனாலும், ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்பது தனிக்கதை.

இதுவரை 5 படங்கள்: நடிகர் விஜய்க்கு ஆரம்பத்தில் சிம்ரன் சரியான ஆன்ஸ்க்ரீன் ஜோடியாக துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அவரை தொடர்ந்து ஜோதிகா குஷி, திருமலை உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஜோடியாக நடித்தார். கில்லி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த திரிஷா தான் விஜய்க்கு சரியான ஜோடி என ரசிகர்கள் அதன் பின்னர் கருத ஆரம்பித்தனர். கில்லி, திருப்பாச்சி என அடுத்தடுத்து இந்த ஜோடி ஹிட் படங்களை கொடுத்தது. அதன் பின்னர் ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் மீண்டும் இணைந்து நடித்தனர். குருவி படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 5வது முறையாக கடந்த ஆண்டு விஜய்யுடன் ஜோடி போட்டு திரிஷா நடித்திருந்தார்.

அன்பெனும் ஆயுதம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா லியோ படத்தில் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் திரிஷா 3.0 வாக மாறிய நிலையில், விஜய்யுடன் லியோ படத்தில் நடித்த திரிஷாவுக்கு அடுத்து அஜித்தின் விடாமுயற்சி, டொவினோ தாமஸின் ஐடென்டிட்டி, சிரஞ்சீவியின் பிரம்மாண்ட படம் என பல படங்கள் வரிசையாக கிடைத்துள்ளன. இந்நிலையில், மீண்டும் விஜய்யுடன் திரிஷா இணைந்து நடித்து வருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

கோட் படத்திலும் திரிஷா: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் அப்பா விஜய்க்கு சினேகாவும் மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் ஜோடி என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக திரிஷா கோட் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக செம அப்டேட் விஜய் ரசிகர்களுக்கு கிடைத்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

விடாமுயற்சி கேப்: அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த கேப்பில் தென்னிந்தியா முழுவதும் பல படங்களில் நடித்து வரும் திரிஷா அப்படியே விஜய்யின் கோட் படத்திலும் சமீபத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அநேகமாக விஜய்யை வைத்து வெங்கட் பிரபு சமீபத்தில் எடுத்த பாடல் காட்சியில் "அப்படி போடு" ரேஞ்சுக்கு ஒரு பாடலுக்கு திரிஷா விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருப்பார் எனக் கூறுகின்றனர்.

விஜய் தான் வில்லன்: அப்பா விஜய்க்கு மகன் விஜய் தான் வில்லன் என்றும் வில் ஸ்மித் நடித்து வெளியான ஜெமினி மேன் சாயலில் தான் கிட்டத்தட்ட தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் உருவாகி வருகிறது என்றும் கூறுகின்றனர். கண்டிப்பா படம் வெளியான பின்னர் மிகப்பெரிய விருந்து ரசிகர்களுக்கு திரையில் வெயிட்டிங் என்பது மட்டும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X