த்ரிஷாவின் அம்மாவால் சலசலப்பு.. பச்சை நிற உடையின் பின்னணி என்ன? இருந்தாலும் சேட்டை தான்!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 ம மணி வரை நடைபெற உள்ளது. விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல விதிகளை விதித்துள்ளது. அதில், வாக்களிக்க செல்வோர் வாக்குப்பதிவு அறையில் புகைப்படமோ, வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றமாகும். வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது செல்போனை எடுத்து செல்லக்கூடாது என அறிவித்துள்ளது.

அம்மாவால் சலசலப்பு: இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை திரிஷா தனது தாயுடன் வாக்களிக்க வந்தார். அப்போது த்ரிஷா பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்து வந்திருந்தார். அவரின் அம்மா க்ரீம் நிற சுடிதாரில் வந்து இருந்தார். அவர் வாக்களிக்க செல்லும் போது கூட யாருடனே பேசிவிட்டு போனை கையில் வைக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், வாக்குச்சாவடிக்குள் செல்லும் போது செல்போன் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை திரிஷாவுடன் வாக்களிக்க வந்த அவரது தாயார் செல்போனுடன் வாக்குச்சவடிக்குள் வந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், த்ரிஷா அம்மாவிற்கு எந்தவிதமான ரூல்சும் இல்லையா? சட்டம் தன் கடமையை செய்யவேண்டும் தேர்தல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என நெட்டிசன்ஸ் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Vijay Trisha TVK
Photo Credit:

பச்சை நிற உடை: அதோடு மட்டுமில்லாமல் விஜய் பற்றி அவரது மனைவி சங்கீதா குற்றம்சாட்டி இருந்த நிலையில் தயாரிப்பாளரின் மகன் திருமணத்திற்கு இருவரும் ஒரே நிற ஆடைஅணிந்து கலந்து கொண்டது பேசு பொருளானது. அதே நேரம், தேர்தல் நேரத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிம்பு உட்பட சில நடிகர்கள் விஜய்யின் 'டிரஸ் கோட்'டை பின் பற்றி அணிந்து வரும் நிலையில், திரிஷா பச்சை நிற உடையில் வந்தது ஏன் என இணையவாசிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் வாக்களித்த போட்டோவை ஷேர் செய்திருக்கும் த்ரிஷா, கில்லி படத்தில் இடம்பெற்ற அர்ஜுனரு வில்லு பாடலை போட்டோவுடன் வைத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் சேட்டைபுடிச்ச வேலை என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X