முதல்வர் லுக்கில் விஜய்... முதல் வரிசையில் த்ரிஷா.. பதவியேற்பு விழாவின் ஹாட் மொமென்ட்!!

சென்னை: நீண்ட அரசியல் இழுபறிகளுக்கும் பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்கும் பிறகு, விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார். காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்த விஜய்க்கு வழியெங்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். "தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய்" என முழக்கமிட்ட ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், சாலையோரங்களில் திரண்டிருந்து அவரை வரவேற்றனர்.

Vijay Trisha TVK Vijay
Photo Credit:

விஜய் பதவியேற்பு விழா: இந்த பதவியேற்பு விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது விஜய்யின் புதிய தோற்றமே. கட்சி தொடங்கிய நாள் முதல் பொதுக்கூட்டங்கள், அரசியல் சந்திப்புகள் என எங்கு சென்றாலும் வெள்ளைச் சட்டை மற்றும் சந்தன நிற பேண்ட் அணிவதை தனது அடையாளமாக வைத்திருந்த விஜய், இன்று அதிலிருந்து மாறி வெள்ளைச் சட்டையுடன் கருப்பு நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார். அரசியல் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை குறிக்கும் விதமாகவே இந்த 'டிரஸ் கோட் மாற்றம்' பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. "இனி நடிகர் விஜய் அல்ல... முதல்வர் விஜய்" என்ற இமேஜை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த எளிமையான ஆனால் அதிகாரபூர்வமான உடை தேர்வு அமைந்ததாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Vijay Trisha TVK Vijay
Photo Credit:

முதல் வரிசையில் த்ரிஷா: அரங்கிற்கு வந்த விஜய்யை காவல்துறையின் உயர் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் மேடையை நோக்கி சென்ற அவர், அங்கு கூடியிருந்த முக்கிய பிரமுகர்களிடம் கைஅசைத்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தோழி நடிகை த்ரிஷா கலந்து கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரங்கிற்குள் வந்த அவரை பார்த்ததும் அங்கிருந்த தொண்டர்கள் "தலைவி... தலைவி..." என முழக்கமிட்டனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக த்ரிஷா புன்னகையுடன் அனைவரையும் பார்த்து கைஅசைத்தார். பின் விஜயின் அம்மா ஷோபா அவரை கட்டி அணைந்து வரவேற்றனார். அவருக்கு முதல் வரிசையில் சிறப்பு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X