ஏன், இப்படியொரு முடிவு? டிஜிட்டல் போதையாம்..சமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய ஹீரோயின்!
சென்னை: பிரபல நடிகை சமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென்று விலகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தெலுங்கு மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்போது மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக, ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

லாக்டவுனுக்கு முன்
இதை த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் படம். இதில் த்ரிஷா டாக்டராக நடிக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை தான் ஆவலாக எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார், த்ரிஷா. இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க, த்ரிஷா ஒப்பந்தம் ஆகி இருந்தார். கருத்துவேறுபாடு காரணமாக இதில் இருந்து விலகினார்.

லாக்டவுன்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். தனது அன்றாட நடவடிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நடிகைகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை பல நடிகைகள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த லாக்டவுன் நேரத்தில் நடிகைகளில் ஒரே பொழுதுபோக்காக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.

புகைப்படங்கள்
நடிகை த்ரிஷாவும் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் மூலம் தனது சமூக வலைத்தள பக்கத்தை பரபரப்பாக வைத்திருப்பார். டிக்டாக் வீடியோக்களையும் வெளியிடுவார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களையும் தங்கள் கமென்ட்களையும் தெரிவிப்பார்கள். சமீபத்தில் கூட அவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோ வைரலானது.

டிஜிட்டல் போதை
இந்நிலையில் நடிகை த்ரிஷா, டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியுள்ளார். இதுபற்றி அவர், இந்த நேரத்தில் என் மனதுக்கு கொஞ்சம் மறதி தேவை. டிஜிட்டல் போதைபொருள் போன்றது. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், இதுவும் கடந்து போகும். விரைவில் உங்களை சந்திக்கிறேன்' என்று கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இருந்து த்ரிஷா இப்படி திடீரென விலகுவது புதிதில்லை.


Click it and Unblock the Notifications











