மெகா ஸ்டார் படம் இல்லைனா என்ன, நம்ம மாஸ் மகாராஜா இருக்காரே... ஹீரோயின் த்ரிஷா மகிழ்ச்சி!
ஐதராபாத்: மெகா ஸ்டார் படத்தில் விலகிய நடிகை த்ரிஷா, மாஸ் மகாராஜா படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தமிழ் தவிர, தெலுங்கு மலையாளப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்போது மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவியின் ஆச்சார்யா
இதை த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில், அவர் மகன் ராம்சரண் நடிக்கிறார். அவர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

5 வருடத்துக்கு பின்
இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த த்ரிஷா, சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் 5 வருடத்துக்குப் பிறகு அவர், தெலுங்கு சினிமாவுக்கு வர இருந்தார். இந்நிலையில் படத்தில் இருந்து தான் விலகி விட்டதாக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார், நடிகை த்ரிஷா.

விரைவில்
இதுபற்றி, 'சில நேரம் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட, விவாதிக்கப்பட்ட விஷயங்கள் திடீரென வேறுவிதமாக மாறிவிடுகிறது. இதனால், படைப்பு ரீதியான வேறுபாடு காரணமாக, சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகி கொள்கிறேன். அந்தப் படக்குழுவுக்கு வாழ்த்துகள். சிறந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை விரைவில் சந்திக்கிறேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஹீரோயின் கிடைப்பது
இந்தப் படத்தில் ராஷ்மிகாவுக்காக கேரக்டரை அதிகப்படுத்தியும் த்ரிஷாவுக்கு முக்கியத்துவம் இல்லாமலும் கதையை மாற்றியதால் படத்தில் இருந்து அவர் விலகியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து இந்தப் படத்தில் காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார். த்ரிஷா, ஏற்கனவே சிரஞ்சீவியின் ஸ்டாலின் படத்தில் நடித்திருந்தார்.

மாஸ் மகாராஜா
இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என அழைக்கப்படும் ரவிதேஜா நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தமிழ் படம் ஒன்றின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இதை ரமேஷ் வர்மா இயக்குகிறார். நடிகை த்ரிஷா ஏற்கனவே சில படங்களில் ரவிதேஜாவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











