பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டுக்கு வராத த்ரிஷா… காரணம் தெரிந்ததும் பதறிய ரசிகர்கள்… அட பாவமே...

சென்னை: லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

லால் சலாம் பட பூஜையின் போதே மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் மீட்டும் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் ஆகியோர் பங்கேற்ற நிலையில் த்ரிஷா கலந்துகொள்ளவில்லை.

பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்

பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், லால் சலாம் பூஜையுடன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் சக்ஸஸ் மீட்டிங்கும் நடைபெற்றது. இதில், மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பங்கேற்றனர். அதேநேரம் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் போன்ற மேலும் பலர் கலந்துகொள்ளவில்லை.

த்ரிஷாவுக்கு என்னாச்சு?

த்ரிஷாவுக்கு என்னாச்சு?

இந்நிலையில், பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டிங்கில் த்ரிஷா ஏன் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார் த்ரிஷா. ஆனால், அங்கு எதிர்பாராதவிதமாக த்ரிஷா கீழே விழுந்ததில், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம். இதனால் த்ரிஷா பாதியிலேயே வீடு திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கால் முறிவு ஏற்பட்டுள்ளதையும் த்ரிஷா உறுதி செய்துள்ளாராம். இதனால் தான், பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டில் த்ரிஷா கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

குந்தவைக்கு பாராட்டு

குந்தவைக்கு பாராட்டு

பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா குந்தவை கேரக்டரில் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படம் குறித்த அறிவிப்பு வெளியான போது, த்ரிஷா குந்தவை ரோலில் செட்டாக மாட்டார் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதையெல்லாம் தனது அபார நடிப்பால் முறியடித்து குந்தவை கேரக்டரில் மிரட்டியிருந்தார் த்ரிஷா. மேலும், படத்தில் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கேரக்டரை த்ரிஷா சந்திக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. பொன்னியின் செல்வன் மூலம் கம்பேக் கொடுத்துள்ள த்ரிஷா, அடுத்து விஜய், அஜித் படங்களில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகள், ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் சாதனை

தொடரும் சாதனை

லைகா தயாரிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடிக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மேலும், தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி, ஓடிடி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வரை வசூலித்துள்ள பொன்னியின் செல்வன் கலெக்‌ஷன், மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் விரைவில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்தும் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X