Trisha Mother Explanation - த்ரிஷா திருமணம் நின்றதற்கான காரணம் என்ன?.. தாய் அளித்த விளக்கம்

சென்னை: Trisha Mother Uma Krishnan (த்ரிஷா தாய் உமா கிருஷ்ணன்) நடிகை த்ரிஷாவுக்கு வருண் என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திடீரென அவர்களது திருமணம் நின்றுவிட்டது. இந்த சம்பவம் அப்போது பெரிதாக பேசப்பட்டது.

த்ரிஷா நடிக்க வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இப்போதும் டாப் நடிகைகளில் ஒருவராக லைம் லைட்டில் இருக்கிறார். அவரை பார்க்கும் அனைவருமே த்ரிஷாவுக்கு வயதே ஆகாதா என கேள்வி எழுப்பிவருகின்றனர். அந்த அளவுக்கு தனது அழகை அவர் கட்டிக்காத்துவருகிறார். வெறும் அழகு மட்டுமில்லாமல் நாளுக்கு நாள் தனது திறமையையும் நிரூபித்துவரும் த்ரிஷாவுக்கு கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

Trisha Mother Uma Explanation about trishas Marriage

பொன்னியின் செல்வன் 2, லியோ: த்ரிஷா இப்போது பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. லியோ அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது. கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்று புகழப்பட்டவர்கள் விஜய்யும், த்ரிஷாவும். இவர்கள் கடைசியாக குருவி படத்தில் இணைந்து நடித்தனர். ஏறத்தாழ 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்திருக்கின்றனர்.

திருமணம் எப்போது?: த்ரிஷாவுக்கு பின் நடிக்க வந்து அவருக்கு போட்டியாளராக கருதப்பட்ட நயன்தாரா திருமணம் செய்துகொண்டார். ஆனால் த்ரிஷாவுக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லை. இதுகுறித்து சமீபத்தில்கூட பொன்னியின் செல்வன் 2 புரோமோஷனில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், என் உயிர் ரசிகர்களுடையது என மழுப்பலான பதிலையே கொடுத்தார்.

Trisha Mother Uma Explanation about trishas Marriage

பயில்வான் வெளியிட்ட காரணம்: இந்தச் சூழலில் த்ரிஷா ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என பேசியிருந்த பயில்வான் ரங்கநாதன், "39 வயதாகும் த்ரிஷா இனிமேல் திருமணம் செய்துகொண்டால் தன்னால் இஷ்டப்படி இருக்க முடியாது என நினைக்கிறார். அதனால்தான் அவர் இன்னமும் திருமணம் செய்துகொள்லவில்லை" என கூறி புதிய சர்ச்சையை பற்ற வைத்திருந்தார். இருந்தாலும் அது உண்மையான காரணமாக இருக்காது என்றே கருதப்படுகிறது.

நின்றுபோன நிச்சயதார்த்தம்: இதற்கிடையே தொழிலதிபர் வருண் என்பவருடன் த்ரிஷாவுக்கு திருமணம் முடிவானது. நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ இவர்களது திருமணம் திடீரென நின்றுபோனது. அதற்கு பல காரணங்கள் யூகங்களாக சொல்லப்பட்டன. இருப்பினும் த்ரிஷாவோ, அவரது தாயோ, வருணோ எதையும் கூறவில்லை. அதேசமயம் திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது என வருண் போட்ட கண்டிஷன்தான் திருமணம் நின்றதற்கான காரணம் என கூறப்பட்டது.

Trisha Mother Uma Explanation about trishas Marriage

உண்மையான காரணம் என்ன?: இந்நிலையில் த்ரிஷாவின் திருமணம் நின்று போனதற்கான உண்மையான காரணத்தை அவரது தாய் உமா கிருஷ்ணன் வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, "த்ரிஷா சினிமாவில் நடிக்கிறார் என்று தெரிந்துதான் பெண் பார்க்க வந்தார்கள். பிறகு எல்லாம் தெரிந்துதான் நிச்சயமும் செய்தார்கள். திருமணத்துக்கு பிறகு த்ரிஷா நடிக்கலாம் என்பதை வருண் ஊக்கப்படுத்தத்தான் செய்தார். அதுதான் உண்மை.

நிறைய பேர் இருக்கிறார்கள்: உண்மை என்ன என்பது குறித்து எங்களுக்குத்தான் தெரியும். ஆனால் அதுகுறித்து நிறைய எழுதுகிறார்கள்.திருமணம் நின்றுபோன விஷயத்தில் பெரியவர்கள் பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் நிறையே பேர் இதில் இருக்கிறார்கள். ஒத்துவராத விஷயங்களை சமரசம் செய்துகொண்டு வாழ வேண்டும் என்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. சில விஷயங்கள் ஒத்துவரவில்லை என்றால் பிரிந்து விடுவது நல்லது" என அவர் விளக்கம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X