த்ரிஷா நடிக்கும் 'ஹே ஜூட்' டீசர் இதோ... நாளைக்கு 'மோகினி' ட்ரெய்லர் ரிலீஸ்!

By Vignesh Selvaraj

சென்னை : 'அரண்மனை 2' என்ற திகில் காமெடி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்த த்ரிஷா அதன்பிறகு 'நாயகி' என்ற திகில் படத்திலும் நடித்தார்.

முதன்முதலாக அவர் கதையின் நாயகியாக நடித்த 'நாயகி' திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

இருப்பினும் அதையடுத்து 'மோகினி', 'கர்ஜனை' ஆகிய படங்களிலும் அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

மோகினி

மோகினி

மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா இரண்டு வேடங்களில் நடித்துள்ள மோகினி படம் ரிலீசுக்கு தயாராகிறது. இந்தப் படத்தில் சமையல் வல்லுனர், பேய் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் த்ரிஷா நடித்திருக்கிறார்.

சண்டைக்காட்சியில் த்ரிஷா

சண்டைக்காட்சியில் த்ரிஷா

இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டன், பாங்காங்கில் நடைபெற்றது. இந்த படத்திற்காக முதன்முதலாக ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்துள்ளார் த்ரிஷா. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி ரிலீஸ்

இந்நிலையில், டிசம்பர் 21-ம் தேதி அதாவது நாளை 'மோகினி' படத்தின் ட்ரெய்லர் வெளியிடுகிறார்கள். பாடல்களை ஜனவரி 12-ம் தேதி வெளியிடுகிறார்கள். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படத்தை திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

ஹே ஜூட் டீசர்

த்ரிஷா, நிவின் பாலி ஆகியோர் நடிக்கும் 'ஹே ஜூட்' மலையாள படத்தின் டீசர் சில நிமிடங்களுக்கு முன்பு ரிலீஸாகி இருக்கிறது. இந்தப் படத்தை ஷியாமபிரசாத் ராஜகோபால் இயக்கியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X