30 வயதை தாண்டிய பிறகும் படு பிசியில் இருக்கும் நடிகைகள்!

திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோர் 30 வயதை கடந்தும் சினிமாவில் படுபிசியாக உள்ளனர்.

சென்னை: திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோர் 30 வயதை கடந்தும் சினிமாவில் படுபிசியாக உள்ளனர்.

திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலொச்சி வருகின்றனர். தமிழ் சினிமா நாள்தோறும் பல புதுமுகங்களை பார்த்து வந்தாலும் இவர்களின் மவுசு இன்னும் குறையாமல் தான் உள்ளது.

நயன்தாரா, திரிஷா, அனுஷ்காவுக்கு 30 வயதை தாண்டிய பிறகும் படவாய்ப்புகள் குவிகின்றன. இளம் கதாநாயகிகள் போட்டிக்கு மத்தியில் 10 வருடங்களுக்கு பிறகும் 3 பேரும் சினிமாவில் பிசியாகவே உள்ளனர்.

கதாநாயகிகளுக்கு 30 வயது ஆனதும் படங்கள் குறைந்து, அம்மா, அண்ணி, அக்கா கதாபாத்திரங்களுக்கு ஒதுக்கி விடுவார்கள். இந்த நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகியோருக்கு நேர் எதிராக உள்ளது. அவர்கள் இன்னும் கதாநாயகிளாகவே உள்ளனர்.

15 வருடங்களாக ஹீரோயின்

15 வருடங்களாக ஹீரோயின்

திரிஷாவுக்கு 34 வயது ஆகிறது. இவர் 2002-ல் மவுனம் பேசியதே படத்தில் இருந்து 15 வருடங்களாக கதாநாயகியாகவே நடித்துக்கொண்டு இருக்கிறார். திரிஷா தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, 1818 மற்றும் 96 ஆகிய படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கொடி படத்தில் திரிஷாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

முன்னணி நாயகர்களுடன்

முன்னணி நாயகர்களுடன்

நயன்தாராவுக்கு 32 வயது ஆகிறது. 2005-ல் ‘ஐயா' படத்தில் அறிமுகமான அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.

அறத்தால் அடுத்தக்கட்டம்

அறத்தால் அடுத்தக்கட்டம்

நானும் ரவுடிதான் படத்தில் அவரது வித்தியாசமான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் அறம் படம் நயன்தாராவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்து சென்றுள்ளது.

தெலுங்கிலும் பிசி

தெலுங்கிலும் பிசி

சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்தது. தொடர்ந்து அவர் நடித்து வரும் இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, கொலையுதிர் காலம் ஆகிய படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையசம்சம் கொண்டவை. தெலுங்கிலும் நயன்தாரா பிசியாக நடித்து வருகிறார்.

36 வயதிலும் பிசி

36 வயதிலும் பிசி

அடுத்தப்படியாக அனுஷ்கா.. இவருக்கு 36 வயது ஆகிறது. 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி 12 வருடங்களாக கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி அவரது கதாப்பாத்திரம் அசர வைத்தது. 36 வயதானாலும் அனுஷ்கா இன்னும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாகதான் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X