'ஆர்யா, எல்லா கதாநாயகிகளுக்கும் பிடித்தவராக இருப்பது எப்படி?' நயன்தாரா-த்ரிஷா விளக்கம்

By Shankar

ஆர்யா, எல்லா கதாநாயகிகளுக்கும் பிடித்தவராக இருப்பது எப்படி? என்பதற்கு நயன்தாராவும், த்ரிஷாவும் இன்று ஒரே மேடையில் விளக்கமளித்தனர்.

நடிகர் ஆர்யா-விக்னேஷ் குமார் தயாரித்து, அவருடைய தம்பி கதாநாயகனாக நடித்துள்ள படம், 'அமரகாவியம்.' இந்த படத்தை ஜீவா சங்கர் இயக்கியுள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் அரங்கில் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துக்கு மத்தியில் நடந்தது.

கேள்விகள்

கேள்விகள்

எந்த சினிமா விழாவுக்கும் வராத நயன்தாரா, இந்த விழாவுக்கு மட்டும் வந்திருந்தார். ஆர்யாவுக்காகவே இப்படி வந்ததாக அவர் கூறினார்.

அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரம்யா, நயன்தாரா மற்றும் த்ரிஷாவிடம் சில கேள்விகளைக் கேட்டார்.

குடும்பத்தில் ஒருத்தி

குடும்பத்தில் ஒருத்தி

நீங்கள் நடித்த பட விழாக்களில் கூட நீங்கள் கலந்து கொள்வதில்லை. ஆனால் இந்த படவிழாவில் மட்டும் கலந்து கொள்வதற்கு காரணம் என்ன?

நயன்தாரா பதில்: இது, என் குடும்ப விழா. ஆர்யா குடும்பத்தில் நானும் ஒரு உறுப்பினர். அவர் அழைத்ததால், அதை விசேஷ அழைப்பாக கருதி, விழாவில் கலந்து கொண்டேன்.

நயன் வருகிறாரா?

நயன் வருகிறாரா?

த்ரிஷா பதில்: ஆர்யாதான் காரணம். இந்த படவிழாவுக்கு வரும்படி அவர் என்னை அழைத்தபோது, நயன் வருகிறாரா? என்று கேட்டேன். வருகிறார் என்று ஆர்யா சொன்னார். நயன் வருவதால் நானும் கண்டிப்பாக வருகிறேன் என்றேன். ஆர்யா என் நல்ல நண்பர்.

நாயகிகளுக்குப் பிடித்தவர்

நாயகிகளுக்குப் பிடித்தவர்

ஆர்யா மட்டும் எல்லா கதாநாயகிகளுக்கும் பிடித்தவராக இருப்பது எப்படி? படப்பிடிப்பின்போது அவர் உங்களை எப்படி பார்த்துக் கொள்வார்?

நயன்தாரா பதில்: ஆர்யா எல்லோரையும் நன்றாக பார்த்துக் கொள்வார். அதனால் எங்கள் எல்லோருக்கும் அவரை பிடிக்கிறது.

என்னிடம் வழிந்ததில்லை

என்னிடம் வழிந்ததில்லை

திரிஷா பதில்: ஆர்யா எப்போதுமே என்னிடம் 'கடலை போட்டு' வழிந்ததில்லை. அவர் ஆளுக்கு ஆள் வித்தியாசம் பார்க்க மாட்டார். எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுவார். படப்பிடிப்பிலும் அப்படித்தான்.

-இவ்வாறு இருவரும் கூறினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X