ரஜினி படத்தில் த்ரிஷா செம்ம கூல் கேர்ளாமே…!
த்ரிஷாவின் புதிய தோற்றம் ரஜினி படத்திற்காக எனத் தெரிகிறது
Recommended Video

சென்னை: ரஜினிகாந்த் படத்திற்காக த்ரிஷா தனது தலைமுடியை நறுக்கியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படத்தில் த்ரிஷா நடிக்கிறார். திரிஷாவின் நீண்ட நாள் கனவு இப்போது நிறைவேறியுள்ளது.

இப்படத்தில் த்ரிஷா நடிக்கும் பகுதி சென்னையில் ஷூட் செய்யப்பட உள்ளது. இப்படத்திற்காக த்ரிஷா தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். அவருடைய புதிய ஹேர் ஸ்டைலை பார்க்கும் போது மிக கூலான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பது தெரிகிறது.
ஷார்ட்டான பிரௌனி ஹேர் ஸ்டைலை வைத்துள்ளார். த்ரிஷா சினிமாவுக்கு வந்து பதினாறு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்றும் பதினாறு வயது பெண்போல அழகாக இருக்கிறார்.
இப்படத்தில், விஜய் சேதுபதி மற்றும் நவாசுத்தீன் சித்திக்கி வில்லன்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, முனிஸ்காந்த், மேகா ஆகாஷ், தீபக் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











