14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் ஜோடி சேரும் த்ரிஷா.. அடுத்த ரவுண்ட் தளபதி 67 அப்டேட் ஸ்டார்ட்!

சென்னை: விஜய் ரசிகர்கள் அப்டேட் கேட்டு கஷ்டப்படவோ, கஷ்டப்படுத்தவோ கூடாது என்பதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் உறுதியாக உள்ளது.

தளபதி 67 படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் பற்றிய அறிவிப்பு நேற்று வரிசையாக வெளியான நிலையில், த்ரிஷாவின் அறிவிப்பு எங்கே காணோம் என கடுப்பான ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி படங்களில் த்ரிஷா இணைந்து நடித்திருந்த காட்சிகளின் தொகுப்புடன் அதிகாரப்பூர்வ ஆன்போர்ட் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகர் த்ரிஷா என அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

சூப்பர் ஜோடி

சூப்பர் ஜோடி

ஷாருக்கானுக்கு எப்படி ஹிட் ஜோடியாக தீபிகா படுகோன் தொடர்கிறாரோ அதே போல ஆன்ஸ்க்ரீனில் விஜய்க்கு ஹிட் ஜோடியாக த்ரிஷா இருந்து வருகிறார். இருவரும் இணைந்து ரசிகர்களை சிரிக்கவும், காதல் கொள்ளவும், எமோஷனலாகவும் வைத்துள்ளனர். மீண்டும் ஒரு முறை இருவரும் தளபதி 67ல் இணைகின்றனர் என்கிற ஸ்பெஷல் வீடியோவுடன் த்ரிஷாவின் ஆன்போர்ட் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

3வது ரவுண்டில் த்ரிஷா

3வது ரவுண்டில் த்ரிஷா

20 ஆண்டுகளை சினிமாவில் கடந்து விட்ட நடிகை த்ரிஷா தற்போது 3வது ரவுண்டில் ராங்கியாக ரகளை செய்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் த்ரிஷாவை மீண்டும் ரசிகர்களுக்கு புது மாதிரியாக கொண்டு வந்து நிறுத்திய நிலையில், இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2 மற்றும் தளபதி 67 என தெறிக்கவிடக் காத்திருக்கிறார்.

த்ரிஷா ரசிகர்கள் கோபம்

த்ரிஷா ரசிகர்கள் கோபம்


என்னங்க பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலி கான் ஆன்போர்ட் அறிவிப்பெல்லாம் சொல்றீங்க, கடைசியா அர்ஜுன் அறிவிப்புடன் இதுவே கடைசின்னு போர்டு போட்டுட்டீங்க, எங்க தலைவி த்ரிஷா ஆன்போர்ட் அறிவிப்பு சொல்ல மாட்டீங்களா என நேற்று த்ரிஷா ரசிகர்கள் அத்தனை அப்டேட் கிடைத்த பின்னரும் தயாரிப்பு தரப்புடன் சண்டை பிடித்து விட்டனர்.

இப்போ செம ஹாப்பி

இப்போ செம ஹாப்பி

ஆனால், தளபதியின் ஹீரோயின் அறிவிப்பை வெறும் கார்டு மட்டும் போட்டு அறிவித்தால் எப்படி? ஸ்பெஷலானவர்களுக்கு ஸ்பெஷல் வீடியோ போட்டால் தானே நல்லா இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் த்ரிஷாவிற்கு தனி வீடியோ போட்டு த்ரிஷா ஆர்மியை ரொம்பவே ஹாப்பி ஆக்கி உள்ளது.

14 வருஷம் கழிச்சு

14 வருஷம் கழிச்சு


கில்லி, திருப்பாச்சி என விஜய் உடன் த்ரிஷா நடித்த இரு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அதன் பிறகு ஆதி மற்றும் குருவி படங்கள் சுமாராக ஓடிய நிலையில், அந்த கூட்டணி அப்படியே டிராப் ஆனது. இந்நிலையில், 14 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக தனலட்சுமி த்ரிஷா தளபதி 67 வண்டியில் ஏறிவிட்டார்.

அடுத்த ரவுண்டு

அடுத்த ரவுண்டு


நேற்று போதும் போதும் என்கிற அளவுக்கு தளபதி 67 படத்தின் காஸ்ட் அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று த்ரிஷாவின் ஆன்போர்ட் அறிவிப்பை மதியமே படக்குழு வெளியிட்ட நிலையில், இன்னும் சில சர்ப்ரைஸ் அறிவிப்புகள் இன்று இரவு வரை வெளியாகும் என விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து காத்திருக்கின்றனர்.

ரொமான்ஸ் இருக்கு

ரொமான்ஸ் இருக்கு

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் ரொமான்ஸ் இருக்குமா? என்கிற கேள்வி எழுந்த நிலையில், கண்டிப்பா இருக்கும் என்பது போல தலையாட்டி பதில் அளித்துள்ளார். தளபதி 67 படத்தில் போல்டாக ஆக்‌ஷன் நடிகையாக நடிக்கப் போகிறாரா? அல்லது மாஸ்டர் படத்தில் வந்த மாளவிகா மோகனன் கதாபாத்திரம் போல இருக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X