விஜய்யிடம் பிடிக்காத ஒரே விஷயம் அதுதான்.. என்னென்னமோ யோசிக்க வைச்சிடுவாரு.. திரிஷா சொன்ன சீக்ரெட்

சென்னை: தமிழ் சினிமாவின் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இப்போது GOAT படத்தில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தவிருக்கிறார். எனவே படங்களில் நடிப்பதை தவிர்க்கவிருக்கிறார். இந்தச் சூழலில் விஜய் குறித்து திரிஷா பேசிய பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட திரிஷா ஓபனா சொல்லிட்டாங்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஃபேவரைட் ஜோடி என பெயர் எடுத்தவர்கள் விஜய்யும், திரிஷாவும். இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்தனர். இந்த நான்கு படங்களில் ஆதி, குருவியை தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. ஃப்ளாப்பான இரண்டு படங்களிலும்கூட இருவரது கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனதாகவும் ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவியது.

Trisha Open Talks about Vijay At Old Interview Goes Trending

குருவிக்கு பிறகு நோ: குருவி படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது.அதற்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கவில்லை. அதேசமயம் விஜய்யும், திரிஷாவும் இணைந்து நடித்தபோது இரண்டு பேரையும் இணைத்து பல ஆண்டுகள் கிசுகிசுக்கப்பட்டன. அந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் பல வருடங்களாக இரண்டு பேரும் இணைந்து நடிக்கவே இல்லை என்ற பேச்சும் கோலிவுட்டில் ஓடியது.

லியோவில் இணைந்த ஜோடி: சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் கமிட்டானார் விஜய். இதில் அவருக்கு ஜோடி யார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ப்ரைஸாக திரிஷா ஹீரோயினாக கமிட்டானார். இதனால் ஆண்டுகள் கழித்து திரையில் மீண்டும் தங்களது ஃபேவரைட் ஜோடியை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். அவர்களது எதிர்பார்ப்புக்கேற்ப இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது.

டேட்டிங் சென்ற விஜய், திரிஷா?: இதற்கிடையே லியோ படத்தின் ஷூட்டிங்கின்போது விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக டேட்டிங் சென்றதாக கூறப்பட்டது. மேலும், விஜய்யும், த்ரிஷாவும் வெளிநாட்டில் ஒரு ஷாப்பிங் மாலில் இருப்பதுபோல் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவியது. இவை அனைத்தும் வதந்தி என்று பின்னர் தெரியவந்தது.

திரிஷா பேட்டி: விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா நடனம் ஆடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் குறித்து திரிஷா அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், “ஷூட்டிங்கின் இடைவேளையில் விஜய் பெரும்பாலும் அமைதியாகவே இருப்பார். அவர் அப்படித்தான். யாரிடமும் பேசமாட்டார்.

எதையோ பார்ப்பார்: ஷூட் முடிந்தால் போதும் ஒரு சேரை எடுத்துப்போட்டுக்கொண்டு சுவருக்கு பக்கத்தில் அமர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருப்பார். சில சமயம் அவர் அமைதியாக இருப்பதை பார்த்தால், ஏதோ நாம் தவறு செய்துவிட்டோமோ என்றுகூட தோன்றும். அவரது அந்த அமைதி எனக்கு சுத்தமாகவே பிடிக்காது" என்றார். இந்தப் பேட்டியை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X