த்ரிஷாவா? நயன்தாராவா ?...சிம்புவுடன் அடுத்து ஜோடி சேர போவது யார் ?

சென்னை : பல சர்ச்சைகள், பிரச்னைகளுக்கு பிறகு சிலம்பரசன் தற்போது மீண்டும் நடிக்க துவங்கி உள்ளார். தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டு, பல்வேறு டைரக்டர்களுக்கும் அவர் செய்து கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிறகு, சில படங்களில் பாடல்களும் பாடி வருகிறார்.

இந்நிலையில் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் 3 வது முறையாக கை கோர்க்க சிம்பு ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதற்கு முன் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் சிம்பு - கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

த்ரிஷாவா – நயன்தாராவா

த்ரிஷாவா – நயன்தாராவா

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க போகும் புதிய படத்தில் அவருடன் ஜோடி சேர போவது த்ரிஷாவா அல்லது நயன்தாராவா என்பது தான் லேட்டஸ்ட் டாக். நயன்தாராவை தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மீண்டும் ஜோடி சேர்க்க முயற்சி

மீண்டும் ஜோடி சேர்க்க முயற்சி

சிம்பு - நயன்தாரா இடையேயான காதல் முறிவுக்கு பிறகு அவர்கள் இருவரும், பாண்டியராஜ் இயக்கிய, இது நம்ம ஆளு படத்தில் மட்டும் தான் சேர்ந்து நடித்தனர். அதற்கு பிறகு இருவரும் நடிக்கவில்லை. அதனால் தான் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா

ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா

ஆனால் ஏற்கவே கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா நடித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் நயன்தாரா இந்த வாய்ப்பை ஏற்க மறுத்தால், த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது வித்தியாசமான படம்

இது வித்தியாசமான படம்

படத்தின் பணிகள் துவங்குவதற்கு முன் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தனது முந்தைய படங்களைப் போல் இந்த படம் இருக்காது என கவுதம் மேனன் ஏற்கனவே கூறி விட்டார்.

இப்போதைக்கு இல்லை

இப்போதைக்கு இல்லை

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ள இப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது நடித்து வரும் மாநாடு படத்திற்கு பிறகு பத்து தல படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இதனால் கவுதம் மேனன் உடனான படத்தின் வேலைகள் துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X