மலையாளத்தில் முதன்முறையாக மோகன்லால் உடன் ஜோடி சேரும் த்ரிஷா

சென்னை: நடிகை த்ரிஷா கடந்த ஆண்டு மலையாளத்தில் நடித்த ஹே ஜூடு படம் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது நடிகர் மோகன்லால் உடன் ஜோடியாக நடிக்கப்போவதாக மலையாள சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாகும்.

தமிழ், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை த்ரிஷா. இவருடன் நடிக்க ஆரம்பித்த நடிகைகள் அனைவரும் இன்றைக்கு கல்யாணம், குழந்தை குட்டிகள் என்று செட்டிலாகிவிட்டனர். ஆனால் த்ரிஷா மட்டும் இன்னும் அதே இளமைத்துடிப்புடன் திறமையான நடிப்பையும் வெளிக்காட்டி வருகிறார். இதற்கு கடந்த ஆண்டு வெளியான 96 படமே அத்தாட்சி.

Trisha pair with Mohanlal for the first time in Malayalam

கடந்த வருடம் அவர் நடித்து வெளியாகிய 96 திரைப்படம் மக்களிடையே வெற்றி பெற்று அவரது மார்க்கெட் பலமடங்கு உயர்ந்தது. இந்த நிலையில் இந்த வருடம் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றார் நடிகை த்ரிஷா.

த்ரிஷா கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தாலும் மலையாளத்தில் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்காதது சற்று மனக்குறையாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நிவின் பாலியுடன் ஹே ஜூடு என்ற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அந்த மனக்குறையும் நீங்கியது.

இதையடுத்து தற்போது மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க போகிறார் என்று தகவல் வெளியானது. திரிஷ்யம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் மோகன்லால் மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப் மீண்டும் இணையை இருக்கிறார்கள். திரிஷ்யம் திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Trisha pair with Mohanlal for the first time in Malayalam

இப்போது நடிகர் மோகன்லால் மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப் இரண்டாவது திரைப்படமும் திரிஷ்யம் திரைப்படம் போல திகில் திரைப்படமாக வரவிருக்கிறது. இந்த திரைப்படத்தை எகிப்து, கனடா மற்றும் சில வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்போவதாக தகவல் வெளியாகியது. வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் இது தான். தற்போது கார்த்தி திரைப்படத்தை இயக்கிவரும் இயக்குனர் ஜீத்து ஜோசப் அதை முடித்துவிட்டு இந்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியது. மேலும் சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, ராங்கி போற்ற திரைப்படம் நடிகை திரிஷா கை வசம் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X