ஹைதராபாத் போலீஸ் அதிகாரியாக த்ரிஷா.. வேற லெவல் ஒடிடி என்ட்ரி.. டிரெண்டாகும் புகைப்படம்!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கெட்டப்பில் நடிகை த்ரிஷாவை காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், போலீஸ் கெட்டப்பில் போஸ்ட் போட்டு ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் நடிகை த்ரிஷா.

19 வயதில் சினிமாவில் நடிக்க வந்த த்ரிஷா 19 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து கலக்கி வருகிறார்.

டெரரான போலீஸ் அதிகாரியாக இல்லாமல் நாய்க்குட்டிகளை கொஞ்சும் க்யூட் போலீசாக இருக்கும் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

அதே அழகு

அதே அழகு

ஜோடி படத்தில் சிம்ரன் தோழியாக ஒரு சீனில் வந்து செல்லும் த்ரிஷா 2002ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். சமீபத்தில் சினிமாவில் 19வது ஆண்டை நிறைவு செய்த நடிகை த்ரிஷா ரசிகர்களுடன் கேக் வெட்டி அந்த சந்தோஷத்தை கொண்டாடினார். மெளனம் பேசியதே படத்தில் எப்படி இருந்தாரோ அதே அழகுடன் இப்பவும் செம க்யூட்டாக இருக்கிறார் த்ரிஷா.

சவுத் குயின்

சவுத் குயின்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என படுபிசியாக ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. தமிழில் பொன்னியின் செல்வன், மலையாளத்தில் மோகன்லால் உடன் ராம் மற்றும் தெலுங்கில் பிருந்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் சவுத் குயின் த்ரிஷா.

போலீஸ் கெட்டப்பில்

போலீஸ் கெட்டப்பில்

நடிகை த்ரிஷா தற்போது போலீஸ் காஸ்ட்யூம் அணிந்து கொண்டு ஸ்க்ரிப்ட் பேப்பருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்திருக்கும் போது அங்கே அவர் பார்த்த தெரு நாய்களை கொஞ்சி ரசிக்கும் அழகான புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை த்ரிஷா ஷேர் செய்துள்ளார்.

வெப்சீரிஸ்

வெப்சீரிஸ்

காஜல் அகர்வால், தமன்னா, அமலா பால், பிரியா பவானி சங்கர் என ஏகப்பட்ட நடிகைகள் ஒடிடி தளத்தில் வெளியாகி வரும் வெப்சீரிஸ்களில் நடித்துள்ள நிலையில், நடிகை த்ரிஷா பிருந்தா எனும் வெப்சீரிஸில் தற்போது நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் சூர்யா வங்கலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த வெப்சீரிஸில் ஹைதராபாத் போலீஸ் அதிகாரியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். விரைவில் சோனி லைவ் ஒடிடி தளத்தில் இந்த வெப் தொடர் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X