ஒருவழியா முத்துபாண்டி காதல் வெற்றி பெற்றது... மீம் கிரியேட்டர்களின் லேட்டஸ்ட் மீம் !

சென்னை : த்ரிஷா பிரகாஷ்ராஜ் மீம்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Recommended Video

66th Filmfare awards 2019 | Trisha 11 Awards for 96 movie

நடிகர் விஜய் நடிப்பில் 2004ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் கில்லி . இந்த படத்தில் த்ரிஷா நாயகியாகவும் பிரகாஷ்ராஷ் வில்லனாகவும் நடித்திருப்பார்கள் .தெலுங்கில் மகேஷ் பாபு நாயகனாக நடித்து வெளியாகி பெரிய வெற்றி அடைந்த ஒக்கடு படத்தின் ரீமேக் தான் கில்லி .

 Trisha Prakash Raj Meme is going viral on social media

இந்த படம் வெளியாகி கிட்டதட்ட 16 வருடங்கள் ஆகிவிட்டன திடீரென்று கில்லி படத்தின் பேச்சு சமூக வலைத்தளங்களில் அடிபட காரணம். த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் சந்தித்து உள்ளனர் அப்போது எடுக்கபட்ட போட்டோ தான் அனைத்திற்கும் காரணம் .

 Trisha Prakash Raj Meme is going viral on social media

பிரகாஷ்ராஜ் கில்லி படத்தில் த்ரிஷாவை விரும்புவார். ஆனால் த்ரிஷா அவரை வெறுத்து விஜயுடன் காதல் கொள்வார். இறுதியில் விஜய் காதல் வெற்றி பெறும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் பெயர் முத்துபாண்டியாகும் த்ரிஷாவின் பெயர் தனலட்சுமி ஆகும். தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தை பார்த்த மீம் கிரியேட்டர்கள் ஆகா கண்டென்ட் கிடைச்சுருச்சுடா என்று இந்த புகைப்படத்தை எடுத்து தற்போது முத்துபாண்டியின் காதல் வெற்றி பெற்றது போன்ற மீம்களை போட்டு தள்ளிவிட்டார்கள் .

இறுதியாக முத்துபாண்டி தனலட்சுமியை கரம் பிடித்தார்கள் என்பதை போன்ற மீம்களும் ஏராளமாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது . இதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பே முத்துபாண்டியின் காதல் உண்மையானது முத்துபாண்டிக்கு நீதி வேண்டும் போன்ற மீம்களை நாம் பார்த்திருப்போம். அதை தாண்டி ட்விட்டரில் ஜஸ்டிஸ் ஃபார் முத்துபாண்டி போன்ற ஹாஸ்டேக்குகளும் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

 Trisha Prakash Raj Meme is going viral on social media

தற்போது இதை தொடர்ந்தே முத்துபாண்டி தனலட்சுமியின் காதல் நிறைவேறியது போன்ற மீம்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர் .சினிமா ரசிகர்களுக்கு இதுபோன்ற மீம் கிரியேட்டர்களின் வித்தியாசமான அணுகுமுறை பிடித்திருப்பதால் பலரும் இந்த வகை மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X