கையில் துப்பாக்கி ஸ்டைலிஷ் லுக் - திரிஷாவின் ராங்கி போஸ்

சென்னை: கையில் துப்பாக்கியும் தில்லான பார்வையுமாக ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார் திரிஷா. ஜோடியில் சிம்ரனுடன் தோழியாக நடித்த திரிஷா பல வருடங்களாக தமிழ் பட உலகில் தனக்கென ஒரு மார்கெட்டை தக்க வைத்திருக்கிறார். ஒரு வருஷமா 2 வருஷமா 20 வருடங்களாக சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருக்கிறார் திரிஷா.

96 படத்தில் அமைதியாக நடித்து அசத்திய திரிஷா இப்போது ராங்கியாக களமிறங்கியுள்ளார். எங்கேயும் எப்போதும் படம் புகழ் சரவணன் ராங்கியை இயக்குகிறார். படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதியிருப்பவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் த்ரிஷா நடிக்கிறார். செகண்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளது. அதில்தான் கையில் துப்பாக்கி ஏந்தியுள்ளார் திரிஷா.

Trisha Raangi female oriented movie

இந்த படத்தின் படப்பிடிப்பின் சென்னையில் நடந்த போது திரிஷாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பல தகவல்கள் அவரின் உடல் நிலை பற்றி பரவியது. அந்த வதந்தியை மறுத்தார் திரிஷாவின் அம்மா உமா. திரிஷா பரிபூரணமாக குணமாகிவிட்டார், தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் என அவரின் அம்மா கூறிய பின்னரே ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ராங்கி படப்பிடிப்பு சென்னையில் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடத்துகிறார்களாம். அங்கு ஸ்டண்ட் காட்சியை படமாக்குகிறார்களாம். சண்டைக்காட்சிகளில் நான்தான் ரிஸ்க் எடுத்து நடிப்பேன் என்று கூறி டூப் போடாமல் நடிக்கிறாராம் திரிஷா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் கவனம் செலுத்துகிறார் திரிஷா. கையில் கத்தி ஏந்திய நாயகி எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. துப்பாக்கி எடுத்த ராங்கி நன்றாக போக வேண்டுமே என்பது திரிஷாவின் ஆசையாக உள்ளது.

96 படத்தில் ஜானு ஜானு என்று ரசிகர்களை உருக வைத்தார். இந்தப்படத்தில் ராங்கி ராக்கம்மாவாக அதிரடி காட்டியுள்ளார் திரிஷா. ராங்கி படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X