த்ரிஷா, ராணா காதல்: அட, நீங்களே படிச்சுப் பாருங்கப்பா
சென்னை: ஹைதராபாத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு த்ரிஷாவும், அவரது காதலர் என்று கூறப்படும் தெலுங்கு நடிகர் ராணாவும் கைகோர்த்து வந்துள்ளனர்.
த்ரிஷாவுக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் இடையே காதல் என்று கூறினால் இதையே எத்தனை காலமாக சொல்வீர்கள் என்று கேட்பீர்கள். ஆனால் வேறு வழியில்லை சொல்லித் தான் ஆக வேண்டும் நீங்களும் படித்தே தான் தீர வேண்டும்.
சரி, பொறுமையை வரவழைத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை படித்துவிடுங்களேன்.

காதல்
த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக பல காலமாக மீடியாக்கள் கதறக் கதற செய்தி வெளியிடுகின்றன. அதே மீடியாக்கள் அவர்கள் அவ்வப்போது பிரிந்துவிட்டதாகவும் கூறுகின்றன.

ராணா
த்ரிஷா கதை ஒரு புறம் இருக்க ராணாவின் பெயர் பல நடிகைகளுடன் சேர்ந்து அடிபடுகிறது. அண்மையில் அவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்படும் நடிகை பாலிவுட்டைச் சேர்ந்தவர்.

எது உண்மை?
த்ரிஷாவும், ராணாவும் காதலர்களா இல்லையா என்று கேட்கிறீர்களா?. இந்த கேள்விக்கு கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் சொல்வது தான் பதில்.

திருமணம்
பிரபல தெலுங்கு இயக்குனரான கே. ராகவேந்திராவின் மகன் பிரகாஷுக்கும், திரைக்கதை எழுதும் கனிகாவுக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.

ஜோடியாக
பிரகாஷ், கனிகா திருமணத்திற்கு ராணாவும், த்ரிஷாவும் தனித்தனியாக இல்லை ஜோடியாக கைகோர்த்து வந்துள்ளனர். அதனால் அவர்களின் காதல் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

திருமணம்
தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்கிறார் த்ரிஷா. முன்னதாக தனக்கு அம்மா மாப்பிள்ளை தேடுவதாக கூறினார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











