Trisha - பாக்ஸ் ஆபிஸில் மாஸ்.. லியோ 148 கோடி வசூல்.. த்ரிஷா ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சென்னை: Leo Box Office Collection (லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல்) விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் முதல் நாளில் 148.5 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கோதாவில் குதித்திருப்பதால் இந்தப் படத்தின் ரிசல்ட்டை அவர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர். அதற்காக முதல் நாளில் படம் பார்க்க படைபோல் திரண்டு சென்றனர் ரசிகர்கள்.

Trisha Reacted For Leo First Day Box Office Collection

விஜய் ரசிகர்களுக்கு ஓகே: முதல் நாள் முதல் காட்சி பார்த்த விஜய் ரசிகர்கள் லியோ படத்தை ஏகத்துக்கும் கொண்டாடினர். லோகேஷ் கனகராஜின் மேக்கிங் மிக மிக அற்புதமாக இருந்ததாக சிலாகித்த ரசிகர்கள் விஜய்யின் நடிப்பையும் பாராட்டினர். அதிலும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக விஜய் பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக கூறினர்.

விஜய் - த்ரிஷா கெமிஸ்ட்ரி: இதற்கிடையே படத்தில் விஜய் - த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி பரவலாகவே கொண்டாடப்பட்டது. இருவரையும் திரையில் பார்த்தபோது கில்லி காலம் நியாபகத்துக்கு வந்ததாக புகழ்ந்தனர். அவர்களின் புகழ்ச்சிக்கு ஏற்பதான் இருவருமே நடித்திருந்தனர். கெமிஸ்ட்ரியும் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் ஓகே இல்லை: விஜய் ரசிகர்கள் இப்படி ஒருபக்கம் படத்தை கொண்டாடிக்கொண்டிருந்தாலும் மற்றொரு தரப்பு ரசிகர்கள் லியோ படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர். பழைய கதை, திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை, எல்சியூ கனெக்ட் சுத்தமாக எடுபடவில்லை போன்ற கமெண்ட்ஸ்களை சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்க முடிந்தது.

வசூல் வேட்டை: படத்துக்கு அதிகமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் முதல் நாள் வசூலில் லியோ பட்டையை கிளப்பியதாக இன்று காலையிலிருந்தே தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் படத்தை தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இன்று மாலை லியோ முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி படம் உலக அளவில் 148.5 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.

த்ரிஷா ரியாக்‌ஷன்: படக்குழுவின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். மேலும் ஜெயிலர் படத்தின் முதல் நாள் கலெக்‌ஷனை பீட் செய்து லியோ கெத்து காட்டியிருப்பதாகவும் சமூக வலைதளங்கலில் கூறிவருகின்றனர். இந்நிலையில் லியோ படத்தின் கலெக்‌ஷன் குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரை நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஃபயர் எமோஜி விட்டிருக்கிறார். லியோ ரிலீஸுக்கு முன்னதாக த்ரிஷா அந்தப் படத்தை பெரிதாக ப்ரோமோஷன் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X