விஜய்யுடன் வீடியோ.. லியோ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா.. ரசிகர்கள் நிம்மதி

சென்னை: லியோ படத்திலிருந்து த்ரிஷா விலகிவிட்டார் என தகவல்கள் தீயாக பரவிய சூழலில் காஷ்மீரிலிருந்து எடுத்த ஃபோட்டோவையும், விஜய்யுடன் இருக்கும் வீடியோவையும் வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் த்ரிஷா.

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. குடும்ப செண்ட்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்து வெளியான வாரிசு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இருப்பினும் வாரிசு படம் 300 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

லோகேஷுடன் மீண்டும் இணைந்த விஜய்

லோகேஷுடன் மீண்டும் இணைந்த விஜய்

இந்தச் சூழலில் வாரிசு படத்துக்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் குமார் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். விஜய் - லோகேஷ் இணைந்த மாஸ்டர் படம் பெரும் ஹிட்டடித்ததாலும், லோகேஷ் கடைசியாக இயக்கிய விக்ரம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனதாலும் இந்தப் படம் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

புருவம் உயர்த்த வைத்த லியோ ப்ரோமோ

புருவம் உயர்த்த வைத்த லியோ ப்ரோமோ

இருவரும் இணையும் படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கவிருக்கிறது. படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இதனையடுத்து விக்ரம் படம் போலவே இந்தப் படத்துக்கும் ப்ரோமோ ஒன்று ஷூட் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது. படத்துக்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இந்தப் படமும் விக்ரம் படம் போலவே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்தப் படம் லோகேஷின் LCUவில் இணையுமா எனவும் காத்திருக்கின்றனர்.

சென்னை திரும்பிய த்ரிஷா; குழப்பத்தில் ரசிகர்கள்

சென்னை திரும்பிய த்ரிஷா; குழப்பத்தில் ரசிகர்கள்

நிலைமை இப்படி இருக்க லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்துவருகிறது. இதற்காக விஜய், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த வாரம் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். அங்கு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்த நிலையில் திடீரென த்ரிஷா விமானத்தில் இருந்தவாறு காஷ்மீரின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதனையடுத்து லியோ படத்திலிருந்து த்ரிஷா விலகி சென்னை திரும்பிவிட்டார் என செய்திகள் பரவின. இதனால் பல வருடங்களுக்கு பிறகு விஜய் - த்ரிஷா என்ற எவர்க்ரீன் ஜோடியை திரையில் காண முடியாதோ என ரசிகர்கள் கவலையடைந்தனர்.

த்ரிஷா சென்னை திரும்பியதற்கான காரணம் என்ன?

த்ரிஷா சென்னை திரும்பியதற்கான காரணம் என்ன?

ஆனால் காஷ்மீரில் குளிர் அதிக அளவு இருப்பதாகவும் எனவே தனது போர்ஷனுக்கான படப்பிடிப்பு வரும்போது மீண்டும் காஷ்மீர் சென்று நடித்துக்கொடுக்க முடிவு செய்தே த்ரிஷா சென்னை திரும்பினார் எனவும் கூறப்பட்டது. இருப்பினும் த்ரிஷா தரப்பிலிருந்து எந்தவிதமான அறிவிப்பும் வராமல் இருந்ததால் ரசிகர்களின் குழப்பம் தீராமல் இருந்தது.

லியோ வதந்திக்கு த்ரிஷா வைத்த முற்றுப்புள்ளி

லியோ வதந்திக்கு த்ரிஷா வைத்த முற்றுப்புள்ளி

இந்நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறையில் இருந்தவாறு காஷ்மீரின் மற்றொரு புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது ஸ்டோரியில், (T)halapathy 67 - (T)risha 67 என்ற கேப்ஷனோடு விஜய்யும், த்ரிஷாவும் இணைந்து நடித்த படங்களின் காட்சி தொகுப்புகளை வீடியோவாகவும் வைத்திருக்கிறார். இதன் மூலம் லியோ படத்திலிருந்து த்ரிஷா விலகவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X