வாவ்.. கார்த்திக்கு போன் செய்த ஜெஸ்ஸி.. மீண்டும் உருவான விடிவி மேஜிக்.. டீசரை வெளியிட்ட திரிஷா!
சென்னை: லாக்டவுனில் வீட்டிலிருந்தபடியே நடிகை திரிஷா மற்றும் கெளதம் மேனன் உருவாக்கி உள்ள குறும்படத்தின் டீசர் ரிலீசாகி உள்ளது.
Recommended Video
நடிகர் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார்.
காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அந்த படம் பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனையை படைத்தது.

10 ஆண்டுகள் கொண்டாட்டம்
அண்மையில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 10வது ஆண்டு விழாவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர். இயக்குநர் கெளதம் மேனன், நடிகை திரிஷா உள்ளிட்டோர் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். விண்ணைத்தாண்டி வருவாயா அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்வியையும் ரசிகர்கள் முன்வைத்தனர்.

சொல்லிக் கொடுத்த இயக்குநர்
சில நாட்களுக்கு முன்னதாக நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் கெளதம் மேனன் வீடியோ கால் மூலமாக, திரிஷாவுக்கு கேமரா எப்படி ஹேண்டில் பண்ணுவது, ஐபோனில் எப்படி 4K தரத்துடன் குறும்படம் எடுப்பது போன்ற டிப்ஸ்களை கொடுத்த வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

மீண்டும் ஜெஸ்ஸி
இந்நிலையில், தற்போது "கார்த்திக் டயல் செய்த எண்" என்ற குறும்பட டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வந்த அந்த ஜெஸ்ஸி மேஜிக்கை மீண்டும் ரசிகர்கள் இந்த ஷார்ட் டீசரிலேயே உணர்ந்து ரசித்து வருகின்றனர்.

சிம்பு வருவாரா
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் அடுத்த பாகத்தை போல இந்த டீசர் அமைந்திருக்கிறது. சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் என பல ஓ.டி.டி தளங்கள் இருக்கின்றன என திரிஷா போனில் கார்த்திக்கு சொல்வது போல இந்த டீசர் அமைந்திருக்கிறது. இதனால், கார்த்திக்கை காட்டுவார்களா? சிம்பு இந்த ஷார்ட் பிலிமில் வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











